முகலிவாக்கம் சிறுமி ஹாசினி கொலையில் குற்றம் சாட்டப்பட்ட தஷ்வந்த், தனது தாய் சரளாவையும் கொலை செய்து விட்டு தலைமறைவாகி யுள்ளார் என்று புகார் எழுந்துள்ளது.
சென்னை முகலிவாக்கத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினி, கடந்த பிப்ரவரி மாதம் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மாயமானர்.
இது குறித்து ஹாசினியின் தந்தை பாபு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
சிறுமி ஹாசினி வசித்து வந்த அதே குடியிருப்பைச் சேர்ந்த தஷ்வந்த் என்ற இளைஞரைப் போலீஸார் கைது செய்தனர். தஷ்வந்த், ஹாசினியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரிய வந்தது.
இதை யடுத்து, தஷ்வந்த் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. இதை எதிர்த்து தஷ்வந்தின் தந்தை சேகர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அவர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டு ஜாமீன் வழங்கப் பட்டது.
ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த், குன்றத்தூரில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்தார். இந்தநிலையில், தஷ்வந்த், தனது தாய் சரளாவை இரும்புக் கம்பியால் தாக்கி விட்டு, வீட்டிலிருந்த நகைகளுடன் மாயமானதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக அவரது தந்தை சேகர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Thanks for Your Comments