யாராவது காயப்பட்டி ருந்தால் வருத்தம் தெரிவிக்கிறோம் என்று 'அருவி' தயாரிப் பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்தி ருக்கிறார்.
அருண்பிரபு புருஷோத்தமன் இயக்க த்தில் அதிதி பாலன், லெனின் பாரதி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளி யான படம் 'அருவி'. விமர்சகர்கள் மத்தியில் படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தி ருக்கிறது.
இப்படம் குறித்து தயாரிப் பாளர் எஸ்.ஆர். பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், "#அருவி - இது அன்பை, மனிதத்தை பறை சாற்றும் நோக்கில் மட்டுமே எடுக்கப் பட்ட படம்.
யார் மனதையும் புண் படுத்தும் நோக்கில் எடுக்கப் பட்டதல்ல. இருந்தும், யாராவது காயப்பட்டி ருந்தால் எங்கள் வருத் தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித் திருக்கிறார்.
முன்னதாக 'அருவி' படத்தின் பெரும் பாலான காட்சிகள் 'சொல்வ தெல்லாம் உண்மை' போன்ற தொரு நிகழ்ச்சியில் நடப்பது போன்று அமைத் திருப்பார் இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமன்.
'அருவி' படத்தை பலரும் பாராட்டி வரும் நிலை யில், அப்படம் குறித்து லட்சுமி ராம கிருஷ்ணன் "பல மாதங் களுக்கு முன் தணிக்கை ஆன போது இந்தப் படம் பற்றி தெரிந்து கொண்டேன். படம் பார்த்த வர்கள்,
இது அற்புத மான படம். தயவு செய்து எதுவும் எதிர் வினை கூற வேண்டாம் என்றார்கள். நல்ல இயக்குநர், நிகழ்ச்சி பின்னணி யில் நல்ல படத்தை எடுத்து ள்ளார்.
பெண்ணிய படம் எடுத்திருந் தாலும், அடக்கு முறைக்கு, அநீதிக்கு ஆளான பெண்களு க்கான தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நிகழ்ச்சியை அவர் கிண்டல் செய்துள்ளார்" என்று தெரிவித் திருக்கிறார்.
இந்நிலை யில், லட்சுமி ராமகிருஷ்ண னுக்கு பதில ளிக்கும் விதமாக தான் இந்த ட்வீட்டை 'அருவி' தயாரிப்பாளர் வெளியிட்டி ருப்பதாகத் தெரிகிறது.
Thanks for Your Comments