அறம் படத்தில் வருவது போல எங்கள் குழந்தைகளும் !

0
தமிழகத்தின் நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தி லிருந்து திருவாரூர் மாவட்டத்துக்குப் பயணிக்கும் வழியில் இருக்கிறது நன்னிலம்.
அறம் படத்தில் வருவது போல எங்கள் குழந்தைகளும் !
மக்கள் தொகை சுமார் பத்தாயிரம். அதில் 70 சதவிகிதம் பேர் விவசாய த்தையே நம்பியிருக்கும் சூழல். ஊரின் மையப் பகுதியில் பேருந்து நிலைய த்தை ஒட்டியிருக்கும் கடைகளைக் கடந்தால் நம் கண்ணுக்கு எட்டும் தூரம்வரை தெரிவது வெறும் வயல்கள்... 

வயல்கள்... வயல்கள் மட்டுமே! இந்த வயல் களின் மூன்று ஏக்கர் அளவிலான பகுதியில் தான் மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுப்பதற் கான தனது பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

நன்னிலத் தின் மாப்பிள்ளைக் குப்பம் பகுதியில், சுற்றிலும் பசுமை சூழ்ந்திருக்க, அதற்கு நடுவே இரண்டு ராட்சத ரிக்குகள் அமைக்கப் பட்டு நிலத்தை ட்ரில் செய்வதற்கான தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளன. 

குறிப்பிட்ட அந்தப் பகுதிக்குச் செல்வதற் காக வயல்களின் நடுவே சாலை அமைக்கப் பட்டுள்ளது. நாங்க சாதாரணமா எங்க ஊருக்கு ரோடு கேட்டா இல்லாத ரூல்ஸ் பேசுவாங்க... 

இதுக்கு மட்டும் ரோடு இவ்வளவு சீக்கிரம் போட்டுருக் காங்க என்கிறார்கள் மக்கள். 

கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி தனது பணிகளை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அங்கே தொடங்கிய நிலையில்,  மக்கள் பணிகள் தொடர் பாகக் கேள்விகளை எழுப்பி யுள்ளார்கள். 

அதற்கு அடுத்த நாள்களில் கேள்வி எழுப்பியவர்களில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது. 
வங்கி ஒன்றில் இரவுக் காவலராகப் பணிபுரியும் ஜானகிராமன், கம்ப்யூட்டர் சென்டர் ஒன்றில் பணிபுரியும் அன்புச் செல்வன், டூ-வீலர் மெக்கானிக் ரவி மற்றும் திலக் என்னும் முழுநேரக் கூலிகள் தான் அந்த நான்கு பேர். 

கைது செய்யப்பட்டுச் சிறை வைக்கப்பட்ட அவர்கள், கடந்த சனிக்கிழமை சிறையில் இருந்து வெளி வந்ததை அடுத்து நன்னிலம் ஊர் மக்களையும் அவர் களையும் சந்தித்தோம். 

நமது கேள்வி களின் வழியே பொது மக்களான அவர்களின் கேள்வி களை அறிந்து கொள்ள முடிந்தது...

“ஓ.என்.ஜி.சி. தரப்பிடம் நீங்கள் எதற்காகக் கேள்விகளை எழுப்பினீர்கள்?”

கடந்த அக்டோபர் 30-ம் தேதி அன்று பணிகளைத் தொடங்குவதற்காக வருவ தற்கு முன்னரே ஒரு முறை வந்து இடத்தைப் பார்த்துத் தேர்வு செய்து விட்டார்கள். 

15 வருடங் களாக இந்தச் செயல் பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஈஸ்டர்ன் எனர்ஜி கம்பெனி இங்கே எண்ணெய் எடுக்கப் போகிறார்கள் என்று தான் தொடக்கத்தில் நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம். 

கதிராமங்கலம் மற்றும் நெடுவாசலில் நடந்த சம்பவத்துக்குப் பிறகு தான் மீத்தேன் எடுக்கப் போகிறார்கள். 
அறம் படத்தில் வருவது போல எங்கள் குழந்தைகளும் !
அதனால் பாதிப்புகள் நிறைய ஏற்படும் என்பது போன்ற விவரங் களைத் தெரிந்து கொண்டோம். கூகுள் சென்று இப்படி யான திட்டங்கள் தொடர்பான விவரங் களை அறிய முடிந்தது. 

இது கட்டாயம் விவசாயிகளை பாதிக்கும் திட்டம். இந்தத் திட்டத்தால், அறம் படத்தில் வருவது போல எதிர் காலத்தில் தண்ணீருக்குக் கூட வழியில் லாமல் அகதிகளாக நாங்களும் எங்கள் குழந்தைகளும்  இந்த இடத்தை விட்டே போகக் கூடிய சூழல் ஏற்படலாம்.

கூகுள் சென்று விவரங்களைத் தெரிந்து கொள்வது மட்டும் போதுமா? கதிராமங்கலம் அல்லது நெடுவாசல் சென்று பார்த்தீர்களா?

தெரியும்... வெறும் கூகுள் தகவல்கள் மட்டும் போதாது. அதனால் தான் களத்துக்குச் சென்று வந்தோம். நெடுவாசலு க்குச் செல்ல முடிய வில்லை.

ஆனால், கதிராமங்கலம் மட்டும் போய் வந்தோம். அங்கே பொது மக்களிடம் பேசினோம். அவர்கள் உபயோகி க்கும் நிலத்தடி நீரைப் பார்வை யிட்டோம்.

அந்த நிலத்தடிநீர் எப்படி இருந்தது?
பார்ப்பதற்கு கழிவுநீர் மாதிரி யான நிறத்திலும், அதில் ஆயில் மிதப்பது போலவும் இருந்தது. 

நிச்சயம் மனிதர் களால் அந்தத் தண்ணீரைக் குடிக்க முடியாது. அப்படி யான சூழலில் தான் அந்தத் தண்ணீர் இருந்தது.

ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தங்களது பணிகளைத் தொடங்க வந்த அன்று என்ன நடந்தது?

30-ம் தேதி அன்று ஓ.என்.ஜி.சி. அனுப்பிய பொருள்கள் வருவதாக எங்களுக்குத் தகவல் வந்தது. இதை அறிந்ததும் பொது மக்கள் நாங்கள் ஒரு 10 பேர் பணிகள் நடக்கும் நன்னிலத்தின் மாப்பிள்ளைக் குப்பம் பகுதிக்குச் சென்றோம். 

அங்கே பராமரிப்பு மேலாளர் என்று சொல்லப் பட்ட ராகுல் என்பவர் தான் எங்களைச் சந்தித்தார். அவரிடம், என்ன பணிகள் நடை பெறுகிறது. 

அடுத்து, என்ன வேலைகளைச் செய்ய இருக்கிறார்கள் என்பது குறித்த விவரங்களைக் கேட்டோம். அதற்கு அவர், தான் பதில் தர முடியாது. வேறொருவர் தான் இதற்கு விளக்க மளிப்பார் என்றார். 

அவர் சொன்னது போலவே, மறு நாள் ஓ.என்.ஜி.சி-யின் மக்கள் தொடர்புத் துறை அதிகாரி எங்களைத் தொடர்பு கொண்டு, பேச்சு வார்த்தை நடத்த சந்திக்க வேண்டும் என்றார். 

எங்களுக்கு விளக்கு வதற்கான கூட்டம் எங்கள் ஊர் கோயிலில் கூட்டப் பட்டது. ஊர் மக்கள் நாங்கள் ஐம்பது பேர் அங்கே கூடினோம். 
ஓ.என்.ஜி.சி. தரப்பி லிருந்து எங்களுக்கு விளக்கமளிக்கச் சிலர் அங்கே வந்திருந் தார்கள். அவர்களிடம் எங்களுக் கிருந்த பத்து சந்தேகங்களைக் கேட்டோம்.

எந்த மாதிரியான சந்தேகங்களைக் கேட்டீர்கள்?

இங்கே தோண்டப்படும் கிணற்றின் நம்பர் என்ன, ஒரு ஜோனில் (zone) எத்தனைக் கிணறுகள் தோண்டப் படுகின்றன, 

கிணறு தோண்டு வதற்கு முன்பு சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்யப் பட்டதா, பணிகளுக்கு இந்த இடம் ஏற்றதா என்று 

ஆய்வு செய்யப் பட்டதா, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து க்ளியரன்ஸ் வாங்கப் பட்டதா உள்ளிட்ட கேள்வி களைக் கேட்டோம்.

அதற்கு அவர்கள் என்ன பதில் சொன்னார்கள்?

அந்த டாக்கு மென்ட்கள் தங்களிடம் தற்போது இல்லை என்றும், தாங்கள் சென்று விட்டு மேலதிகாரி களிடம் கேட்டு அனுப்புவ தாகவும் சொன்னார்கள். 

இன்று வரை அப்படி எதுவும் தரவில்லை. ஆனால், அதற்குப் பதிலாக அன்று கேள்வி கேட்ட எங்களின் வீடுகளுக்குத் திடீரென்று கடந்த புதன்கி ழமை அன்று போலீஸார் வந்தார்கள்... 

வீட்டு வாசலில் இரண்டு போலீஸ், வீட்டுக்குள் ஒருவர், வீட்டுத் தோட்டத் தில் இருவர் எனக் காவலுக்கு இருந்து எங்களைக் கைது செய்து அழைத்துச் சென்றார்கள். 
ஒரு கொலைக் குற்றவாளியைக் கைது செய்வது போன்ற உணர்வை ஏற்படுத்தினார்கள். பிறகு, டாக்குமென்ட் காவல்துறை துணை ஆய்வாளரிடம் கொடுக்கப் பட்டிருக்கிறது என்றார்கள். 

இதில் என்ன விந்தை என்றால், மக்களுக்கு இது தொடர்பான தெளிவினை ஓ.என்.ஜி.சி. தரப்பு தான் ஏற்படுத்த வேண்டும். ஆனால், அவர்கள் எதற்குப் போலீ ஸாரின் உதவியை நாடுகிறார்கள் என்று தெரிய வில்லை.

மக்களிடம் விளக்க மளிக்க வந்தவரை நீங்கள் தாக்கிய தாகவும், மக்களிடம் தவறான பரப்புரையை எடுத்துச் சொல்வ தாகவும் ஓ.என்.ஜி.சி. தரப்பினர் போலீஸு க்கு அளித்த புகாரில் கூறியிருக் கிறார்களே?

நாங்கள் சட்டத்தை மதிப்பவர்கள்... குண்டர்கள் கிடையாது. அவர்கள் போலீஸு க்குப் பழக்க மானவர்கள். 

என்ன வேண்டு மானாலும் எழுதிக் கொள்வார்கள். முதல் தகவல் அறிக்கை யில் ஜோஷி என்பவர் எங்கள்மீது புகார் அளித்ததாகக் கூறப்பட்டி ருக்கிறது. 

அப்படி ஒருவர் இங்கு வரவே இல்லை. நாங்கள் அவரைப் பார்க்கவும் இல்லை. ராகுல் மற்றும் ராஜசேகர் என்பவர் களைத் தான் நாங்கள் சந்தித்தோம். 

மேலும், நாங்கள் தவறான கருத்து களை எடுத்துச் சொல்கிறோம் என்று அவர்கள் நினைத்தால், மக்களாகிய எங்களிடம் நாங்கள் கேட்கும் கேள்வி களுக்குப் பதில் அளித்து, சரியான கருத்து களைக் கூறித் தெளிவுப் படுத்த வேண்டியது அவர்களது கடமை.

நீங்கள் ஓ.என்.ஜி.சி. குறித்து தெளிவுப் பூர்வமான கேள்வி களைக் கேட்டிருக் கிறீர்கள்.. மற்றவர்களிடம் எந்த மாதிரியான கேள்விகள் இருந்தன?
அறம் படத்தில் வருவது போல எங்கள் குழந்தைகளும் !
நாங்கள் ஓ.என்.ஜி.சி- யிடம் கேட்ட ஆவணங்களைக் கூட மக்கள் பெறுவற்குப் பொறுமையாக இல்லை.  எண்ணெய் எடுக்கத் தானே வர்றாங்க? எங்களுக்கு எண்ணெய்யே வேண்டாம். 

எங்களுக்கு எங்க புள்ள குட்டிங்க ஆயுசுக்கும் நல்ல படியா உசுரோட இருக்கணும். எங்களுக்கு அது தான் முக்கியம்’ என்பது தான் அவர்களது வாதமாக இருந்தது. அதற்கு, ‘15,000 அடிக்குக் கீழ் தான் பணிகள் நடைபெறும். 

அதனால், மண்ணுக்கு மேலே நீங்கள் இயல்பாக வாழ்ந்து கொள்ளலாம்’ என்றார்கள் ஓ.என்.ஜி.சி -யினர். சாதாரண மாக நூறு அடிக்குக் கீழே போனால் தண்ணீரே இங்கே கிடைப்ப தில்லை. 

இதனால் நிலங்கள் அனைத்தும் ஏற்கெனவே பாதிப்பு அடைந்தி ருக்கின்றன. இந்த நிலையில், இவர்கள் ஆழ்துளைக் கிணறு களை ட்ரில் செய்தால் என்ன பாதிப்புகள் வரும் என்று தெரிய வில்லை. 

மேலும், அன்று விளக்கம் அளிக்கும் போது, ‘எங்களிடம் எண்ணெய் எடுப்போம்’ என்றார்கள். ஆனால், எஃப்.ஐ. ஆருக்குக் கொடுக்கப் பட்ட புகாரை நாங்கள் வாங்கிப் பார்த்த போது... 

அதில், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு’ என்றிருக்கிறது. இப்படியான முரண்பட்ட தகவல் களைத் தருகிறார்கள்.
ஆனால், ஓ.என்.ஜி.சி -யைத் தாக்கி போஸ்டர் ஒட்டப் பட்டதால் தான் இந்தக் கைது நடவடி க்கை என்று கூறப்படுகிறதே?

அந்தப் போஸ்டரை ஒட்டியவர்கள் யார் என்று தெரியவில்லை. நாங்களும் அதைச் செய்யவில்லை. ஆனால், அதில் ஒட்டியிருந்த வாசகங்கள் இவை தான்... கதிராமங்கலம், நெடு வாசலை அடுத்து நன்னிலமா? ஓ.என்.ஜி.சி-யே வெளியேறு.. 

இப்படிக்கு நன்னிலம் பாதுகாப்பு இயக்கம்’ என்று அதில் எழுதப் பட்டிருந்தது. அதற்காகக் கைது செய்து நான்கு நாள்கள் சிறைப் பிடிக்கும் அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமா என்றும் தெரிய வில்லை. 

இதை ஒரு வகையில் அச்சுறுத்த லாகவும் பார்க்கிறோம். யார் டெக்னிக்க லாகக் கேள்வி களை முன் வைக்கிறார் களோ, அவர் களை அடக்கி னால் எதிர்ப்பு அடங்கி விடும் என்பது தான் அவர்களது எண்ணமாக இருக்கிறது. 

அதனடிப் படையில், அன்றைக்கு நாங்கள் கைது செய்யப் பட்டிருக்கலாம் என்கிற எண்ணம் எழுகிறது. 
அறம் படத்தில் வருவது போல எங்கள் குழந்தைகளும் !
இது, ஒரு பக்கம் இருக்க... மற்றொரு பக்கம், காவல் துறை ரோந்து வாகனங் களைக் குவித்தி ருக்கிறது. மக்களை ஓர் அச்சுறுத்தும் மனநிலை யிலேயே வைத்திருக் கிறார்கள். 

இளைஞ ர்கள் சாதாரண மாகக் கூடிப் பேசும் இடத்தை ஏதோ கலவரபூமி போல நினைத்துக் களைந்து போகச் சொல்கிறார்கள். கதிரா மங்கலத்தில் நாங்கள் பார்த்த அதே அடக்கு முறை இங்கே வந்து விட்டது”.

இது தொடர் பான உங்கள் கருத்து களை ​​​​​​ #SaveNannilam என்ற ஹேஷ்டேக் உடன் ஓ.என்.ஜி.சி நிறுவன த்தையும் குறிப்பிட்டு சமூக வலை தளங்களில் பகிரவும்...  விகடன்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings