ஜெ.தீபா வேட்பு மனு நிராகரிப்பு !

0
ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 27-ந்தேதி தொடங்கி நேற்றுடன் முடிந்தது.
அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட் பாளர் மருது கணேஷ், டி.டி.வி.தினகரன் ஆகியோர் கடந்த 1-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர். அன்று மாலை வரை 30 பேர் மட்டுமே மனுதாக்கல் செய்தி ருந்தனர். 

இந்த நிலையில் கடைசி நாளான நேற்று மேலும் சிலர் வேட்புமனு தாக்கல் செய்யக் கூடும் என்று எதி பார்க்கப் பட்டது. நேற்று மட்டும் 145 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்து. 

அதுவும் சுயேட்சை வேட்பாளர்கள் விதம், விதமாக வந்து தேர்தல் அலுவலக அதிகாரிகளை திணற வைத்து விட்டனர். இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு வேட்பு மனுக்கள் பரிசீலனை தொடங்கியது. 

முதலில் அங்கீகரிக் கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட் பாளர்கள் மனுக்கள் பரிசீலனை க்கு எடுத்துக் கொள்ளப் பட்டன.

அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், டி.டி.வி. தினகரன் ஆகியோர் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப் பட்டன. 

அதிமுக வேட்பாளர் மதுசூதன னின் படிவம் B-ல் ஒருங்கி ணைப்பாளர் பன்னீர் செல்வம்  மற்றும் இணை ஒருங்கி ணைப்பாளர் பழனிசாமி கையெழுத் திட்டுள்ள தாக தகவல்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக் கோட்டுதயம் மற்றும் பா.ஜ.க வேட்பாளர் கரு. நாகராஜன் வேட்பு மனுக்கள் ஏற்கபட்டது. 

விஷால் வேட்பு மனுவில் உறுதி மொழி, கணக்கு விவரங்கள் முறை யாக இல்லை என குற்றச்சாட்டு எழுந்தது 

இதனால் நடிகர் விஷாலின் வேட்புமனு ஏற்க அ.தி.முகவும் திமுகவும் எதிர்ப்பு தெரிவித்தன. இதை தொடர்ந்து அவரது மனு மீதான பரிசீல னையில் இழுபறி நீடிக்கிறது.

படிவம் 26-ஐ பூர்த்தி செய்யாத தால் ஜெ. தீபாவின் வேட்பு மனுவை, தேர்தல் நடத்தும் அதிகாரி நிராக ரித்தார். 

மேலும் தீபா மனு சரியாக பூர்த்தி செய்யப்பட வில்லை. என தெரியவந்து உள்ளது. ஏற்கனவே நேற்று பேட்டி அளித்து தீபா தனது வேட்புமனு நிராகரிக் கப்படும் என கூறி இருந்தார்.

இது குறித்து இன்று பேட்டி அளித்த தீபா:-
நான் ஏற்கனவே இது குறித்து கூறி இருந்தேன் எனக்கு போன் மூலம் மிரட்டல் வந்தது. நீங்கள் வேட்புமனு தாக்கல் செய்யா தீர்கள் 

செய்தாலும் நிராகரி க்கப்படும் என் 2 நாட்க ளுக்கு முன்னரே என்னிடம் கூறி னார்கள். 

வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் போதே எனக்கு பல்வேறு இடை யூறுகள் இருந்தது.என கூறினார்
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings