மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்படும் வீடியோவின் உண்மை தன்மை குறித்த சந்தேகம் இருப்பதாக நடிகர் ஆனந்தராஜ் கூறியுள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவ சிகிச்சை பெற்றது தொடர் பான வீடியோ காட்சியை டிடிவி தினகரனின் ஆதரவாளர்
வெற்றிவேல் ஆர்.கே.நகர் வாக்குப் பதிவுக்கு முதல் நாளான கடந்த 20-ம் (டிச.20) தேதி வெளி யிட்டார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வீடியோ காட்சிகள் தொடர்பாக நடிகர் ஆனந்தராஜ் செய்தியாளர் களுக்கு பேட்டி யளித்தார்.
இது குறித்து அவர் கூறிய தாவது
"ஜெயலலிதா சிகிச்சை அளிக்கப் படுவது போன்று வெளியான வீடியோ காட்சிகளில் சந்தேகம் உள்ளது.
அதன் உண்மைத் தன்மை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். அது, போயஸ் கார்டனில் எடுக்கப் பட்டதா? என்ற சந்தேகம் உள்ளது.
வீடியோவை எந்த தேதியில் எடுத்தது, எந்த நேரம் எடுத்தது? என்ற விவரங்கள் இருக்கும் அதையும் சேர்த்து வெளி யிடுங்கள்
இன்று தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்து விட்டது. எந்தத் தேதியில் எடுக்கப் பட்டது, என்ன நேரத்தில் எடுக்கப் பட்டது
என அனைத்து விவரங் களையும் வெளியிட முடியும். அந்த காட்சியின் உண்மை யான பிரதியை வெளி யிடுங்கள்.
அந்த வீடியோ காட்சியின் முதல் பிரதியை கைப்பற்றி விசாரிக்க வேண்டும். ஒரு குடும்பத்தி னருக்காக அதிமுக தொடங்கப் படவில்லை.
லட்சக்கணக் கான அதிமுக தொண்டர் களுக்காகவே அதிமுக தொடங்கப் பட்டது’’ எனக் கூறினார்.
Thanks for Your Comments