ரஜினிகாந்த் பேச்சை கேட்டு முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி வாய் விட்டு சிரித்த ஒரு தருணம், சமூக வலைத் தளத்தில் வைரலாகி யுள்ளது.
சந்திரமுகி திரைப்பட வெற்றி விழாவின் போது, ரஜினி பேசிய பேச்சுக்கு தான் அப்போதைய முதல்வர் கருணாநிதி வாய் விட்டு சிரித்தார்.
தலைமை விருந்தினராக அவர் பங்கேற்றிருந்த அந்த விழாவில் நடிகர் பிரபுவும் கருணாநிதியுடன் அமர்ந்துள்ளார். சந்திரமுகி திரைப் படத்திற்கு முன்பு வெளியான பாபா வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை.
அதுவரை ரஜினி திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றியை குவித்து வந்தன. எனவே பாபா படத்திற்கு பிறகு பலரும் பல விதமாக விமர்சனம் செய்தனர்.
சொல்லியடித்த சந்திரமுகி
ஆனால், நான் யானை கிடையாது. குதிரை. எழுந்து ஓடுவேன் என பஞ்ச் பேசிதான், சந்திரமுகி திரைப் படத்தில் நடிக்கவே தொடங் கினார் ரஜினி.
சொன்ன படியே செய்தும் காட்டினார். சந்திரமுகி அனைத்து தரப்பினர் வரவேற்பை யும் பெற்று பட்டையை கிளப்பியது.
குட்டிக் கதை
அந்த படத்தின் வெற்றி விழாவில் தான் ரஜினிகாந்த், தவளைகளை வைத்து ஒரு குட்டி கதை சொன்னார். மேலும், நானும் காது கேட்காத தவளை தான் என அவர் குறிப் பிட்டார்.
காது கொடுப்ப தில்லை
விமர்சனங் களுக்கு காது கொடுத்து முன்னேற்ற த்தை கெடுப்ப தில்லை என்று ரஜினி அதில் ஆணித் தரமாக தெரிவித்தார். அதை நீங்களும் பாருங்கள் அதிலுள்ள அர்த்தம் தெரியும்.
ரஜினி அரசியல்
நாளை ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப் பாட்டை அறிவிக்க உள்ள நிலையில், இந்த பேச்சும் முக்கியத் துவம் பெறுகிறது. ரஜினியின் கதாப் பாத்திரத்தை எடுத்துக் காட்டுவதாக உள்ளது இது.
Thanks for Your Comments