எகிப்தில் கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் கடை ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் பலியாகினர்.
இது குறித்து எகிப்து உள்துறை அமைச்சகம் தரப்பில், எகிப்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவலாயம் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார்.
மேலும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் நடத்தி வந்த கடை ஒன்றிலும் தூப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்த இரண்டு சம்பவங் களில் 11 பேர் பலியாகினர் என்று கூறப்பட் டுள்ளது.
இந்தத் தாக்குதலு க்கு ஐஎஸ் தீவிரவதிகள் பொறுப்பேற்று கொண்டு ள்ளதாக அமாக் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட் டுள்ளது.
எகிப்தில் மின்யா மாகாண த்தில் கடந்த மே மாதம் கிழக்குப் பகுதியில் செயிண்ட் சாமுவேல் தேவலாயத்துக்கு
பேருந்தில் சென்று கொண்டிருந்த கிறிஸ்தவர்கள் மீது ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 28 பேர் பலியாகினர்.
20 பேர் காயமடைந்தனர். எகிப்திலுள்ள கிறிஸ்தவ சிறுபான்மை யினருக்கு எதிராக ஐஎஸ் தீவிரவாதிகள் சமீப காலமாக தாக்குதலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத் தக்கது.
Thanks for Your Comments