ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பாஜக அழிந்து விடும் என்றனர். ஆனால் மக்கள் மகத்தான வெற்றியை கொடுத்து ள்ளதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித் துள்ளனர்.
குஜராத் மற்றும் ஹிமாச்சல் சட்டசபை தேர்தலில் பாஜக பெற்றுள்ளது. இதனை நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் கொண்டாடி வருகி ன்றனர்.
இதனை முன்னிட்டு டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலக த்தில் திரண்டிருந்த தொண் டர்கள் மத்தி யில் பிரதமர் மோடி வெற்றி உரை யாற்றினார்.
அப்போது வெற்றியை பரிசளித்த இருமாநில மக்களு க்கும் அவர் உணர்ச் சிததும்ப நன்றி தெரிவித்தார்.
மக்கள் தயாராகி விட்டனர்
குஜராத், ஹிமாச்சல் வெற்றியின் மூலம் அரசுக்கு எதிரான பொய் பிரசாரம் மக்களிடையே எடுபட வில்லை என்றும் பிரதமர் மோடி தனது வெற்றி உரையின் போது தெரிவித்தார்.
சீர்திருத்த த்திற்கு மக்கள் தயாராகி விட்டனர் என்பதை, இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.
எதிர்பார்ப்பு இல்லை
பாஜகவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ததன் மூலம் மக்கள் வளர்ச்சியை தேர்ந்தெடுத் துள்ளனர் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
முன்பு இந்திய மக்களுக்கு நம்பிக்கை, எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் இருந்தது என்ற அவர் தற்போது அந்த நிலை மாறியுள்ள தாக கூறினார்.
தற்போதையை சூழலில்..
மக்களுக்கு புதிய கனவுகள், நம்பிக்கை பிறந்து ள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய சூழலில் ஒரு அரசு மீண்டும் வெற்றிபெற்றால் அது மிகப்பெரிய சாதனை என்றும் பிரதமர் மோடி கூறினார்.
மகத்தான வெற்றி
1997-98 முதல் இன்று வரை குஜராத்தில் நடைபெற்ற அனைத்து தேர்தல் களிலும் பாஜக வெற்றி பெற்றிருப்பது வரலாற்று சாதனை என்றும் மோடி கூறினார்.
ஜிஎஸ்டி மற்றும் பணமதிப் பிழப்பு நடவடிக்கை யால் பாஜக அழிந்து விடும் என்றனர்.
ஆனால் மக்கள் அதனை பொய்யாக்கி மகத்தான வெற்றியை கொடுத்து ள்ளனர் என்றும் பிரதமர் மோடி பெருமி தத்துடன் தெரிவித்தார்.
Thanks for Your Comments