சோதனை ஓட்டத்தின் போது மெட்ரோ ரயில் விபத்து | Metro train accident during test run !

0
டெல்லி யில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பல்வேறு விதமான போக்கு வரத்து வசதிகள் செய்யப் பட்டு வரு கின்றன. 


அதன் ஒரு பகுதியாக மெட்ரோ ரெயில் சேவை தொடங்க ப்பட்டது. இதற்கு டெல்லி மக்கள் பெரும் வரவேற்பு அளித்து வருகி ன்றனர். 

டெல்லி மெட்ரோ ரயிலின் மஜெந்தா பிரிவில் அடுத்த வாரம் முதல் ரயில் சேவை துவங் கப்பட உள்ளது. 

இந்த ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்க உள்ளார். இதற்காக முழு வீச்சில் முன்னேற் பாடுகள் நடை பெற்று வருகின்றன.

இன்று நடைபெற்ற சோதனை ஓட்ட த்தின் போது, கால்கஜி மெட்ரோ ரயில் நிலைய த்தில் உட்புறம் வந்த ஆளில்லா மெட்ரோ ரயில், பக்க வாட்டு சுவரில் மோதியது. 

மேலும், சுவரை உடைத்துக் கொண்டு அந்த ரத்தில் நிற்பது போல் காட்சி அளித்தது. அதிருஷ் டவசமாக ரயில் தரையில் கவிழ வில்லை. 

ஒரு வேளை, தரையில், விழுந்து மோதி யிருந்தால், பெரும் சேதம் ஏற்பட்டு இருக்க கூடும் என கூறப் படுகிறது. 

மாலை 4 மணி யளவில் இந்த விபத்து நடை பெற்றுள்ளது.

விபத்துக் குள்ளான மெட்ரோ ரயில், ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் வகையை சேர்ந்த தாகும். 

ரயிலின் பிரேக் சிஸ்டம் சரியாக பரிசோதிக் கப்பட வில்லை எனவும் மனித தவறு காரண மாகவே விபத்து ஏற்பட் டுள்ளதாக 

தெரிவித் துள்ள டெல்லி மெட்ரோ நிர்வாகம், இந்த சம்பவம் குறித்து உயர் மட்ட விசார ணைக்கு உத்தர விட்டுள்ளது.

வரும் கிறிஸ்துமஸ் தினத்தன்று பிரதமர் மோடி, இந்த மெட்ரோ ரயில் போக்கு வரத்தை துவக்கி வைப்பதாக இருந்தது. 

தற்போது விபத்துக் குள்ளான தால், இந்த நிகழ்ச்சி நடைபெறுமா? என்பது கேள்விக் குள்ளாகி யுள்ளது. 

மஜெந்தா ரயில் பிரிவு, டெல்லி ஜானக்புரி யில் இருந்து நொய்டா வரை இயக்கப்பட உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings