பெருங்குடி அடுத்த கல்லுக் குட்டை, சீனிவாசராவ் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (32). அதே பகுதி கலைஞர் கருணாநிதி சாலையில் அடகு கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.
இந்நிலையில், நேற்று அதிகாலையில் 3 பேர் கொண்ட மர்ம கும்பல், இவரது அடகு கடையின் பூட்டை உடைத்து உள்ளே, நுழைந்துள்ளனர். பின்னர், கடையில் இருந்த கல்லாப் பெட்டியை உடைத் துள்ளனர்.
சத்தம் கேட்டு எதிரில் உள்ள மளிகை கடையில் பணி யாற்றும் கோபால் என்பவர் அங்கு வந்து பார்த்த போது, கத்தி மற்றும் இரும்பு கம்பி ஆகிய ஆயுதங் களை கையில் வைத்துக் கொண்டு 3 பேர் பரபரப்பாக இயங்கியது தெரிந்தது.
இதைக் கண்ட கோபால் பயந்து போய், அடகு கடையின் உரிமையாளர் ராஜேஷுக்கு தகவல் தெரிவித் துள்ளார். மேலும், பக்கத்து கடைக் காரர்கள், பொது மக்கள் கடையின் முன்பாக திரண்டனர்.
பொது மக்களை கண்டு அதிர்ச்சி அடைந்த 3 பேரும், அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். இதை யடுத்து பொது மக்கள் அவர்களை மடக்கி பிடிக்க முயன்ற போது ஆயுதங் களை காட்டி மிரட்டினர்.
பின்னர், அவர்கள் கொண்டு வந்த கோணிப்பை, காலணி களை போட்டு விட்டு ஓடினர். அப்போது அவ்வழி யாக ரோந்து வந்த துரைப் பாக்கம் போலீசார் 3 பேர் கும்பலை விரட்டிச் சென்றனர்.
ஆனாலும் அவர்கள் கண்ணி மைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பினர். கொள்ளை நடக்கும் முன்பாக பக்கத்து கடை ஊழியர் கண்டு பிடித்ததால்
அடகு கடையில் இருந்த, ₹8 லட்சம் மதிப்பி லான தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையர் கைகளில் சிக்காமல் தப்பியது.
இது குறித்த புகாரின் பேரில் துரைப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து அதே பகுதியில் கட்டிட பணியில் ஈடுபட்டுள்ள வடமாநில வாலிபர் களிடம் விசாரித்து வருகின்றனர்.
Thanks for Your Comments