மும்பையில் நிகழ்ந்த தீவிபத்து போன்று மீண்டும் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
லோயர் பரேல் பகுதியில் உள்ள வணிக வளாகத்தின் உணவு விடுதியில் பற்றிய தீ கேளிக்கை விடுதி, வர்த்தக நிறுவனங்கள் என மற்ற பகுதிகளுக்கும் பரவியது.
இதனால் நள்ளிரவு வேளையில் மூச்சித் திணறல் ஏற்பட்டு 14 பேர் உயிரி ழந்தனர்.
தீப்பற்றிய உணவகத்தில் வபத்துக்கு முன்பாக குஷ்பு என்ற பெண் கணவர் மற்றும் நண்பர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
இதனிடையே பாதுகாப்பு அம்சங்கள் இல்லாத கட்டடங்கள் மும்பை போன்ற நகரங்களில் அதிக மளவில் இருப்பதே இது போன்ற விபத்துக்கு காரணம் என்று பல்வேறு தரப்பினர் கூறி யுள்ளனர்.
மும்பை போன்ற மக்கள் நெருக்கம் மிக்க நகரங்களில் அதிகாரி களின் அலட்சியத்தால் அப்பாவி மக்கள் உயிரிழப்பது வேதனை யளிப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
விபத்து நேரிட்ட இடத்தில் ஆய்வு செய்த மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ், விசாரணை க்கு உத்தர விட்டுள்ளார்.
விபத்து தொடர் பாக மாநகராட்சி அதிகாரிகள் 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.
Thanks for Your Comments