என் தந்தைக்கு வைத்த குறி... தேஜாராமின் மகள்... மகன் !

0
ராஜஸ்தானில் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் சுட்டுக் கொல்லப் பட்டது குறித்து கொள்ளை கோஷ்டியை சேர்ந்த தேஜாராமின் மகள் ராஜன் சவுத்ரி,
என் தந்தைக்கு வைத்த குறி... தேஜாராமின் மகள்... மகன் !

மகன் பிரகாஷ் சவுத்ரி ஆகியோ ரிடம், ‘தந்தி டி.வி.’ நிருபர் அரவிந்த், ஒளிப்பதி வாளர் பிரதீப் சவ்கான் உதவி யுடன் சிறப்பு பேட்டி கண்டார். 


அவர்கள் கூறிய விவரம் வருமாறு:- தேஜாராமின் மகள் ராஜன் சவுத்ரி கூறியதாவது:-

சம்பவம் நடந்த போது எங்கள் வீட்டில் நாங்கள் அனைவரும் நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தோம். 

அப்போது நாதுராம் எங்கள் வீட்டில் இருப்பது எனக்கு தெரியாது. இந்த நிலை யில் திடீரென்று பயங்கர சத்தம் கேட்டது. 

பின்னர் சிலரது குரல்களும் பயங்கர மாக கேட்டது. உடனடி யாக நாங்கள் எழுந்து சென்று பார்த்தோம். 

அப்போது சிலர் (தமிழக தனிப்படை போலீசார்) எங்கள் வீட்டின் அறையில் பரபரப்பாக நின்றி ருந்தனர்.

இதை யடுத்து எனது தந்தை அவர்களை பார்த்து, ‘யார் நீங்கள்? என்ன வேண்டும் உங்களுக்கு?’, என்று கேட்டார். 


அதற்கு அவர்கள் எதுவும் சொல்ல வில்லை. இதனால் வீட்டுக்கு வந்தவர்கள் கொள்ளை யர்கள் என நினைத்து நாங்கள் கற்களால் தாக்க ஆரம்பி த்தோம்.

போதிய வெளிச்சம் இல்லாததால்...

அப்போது அங்கிருந் தவர்களில் ஒருவர் எனது தந்தையை நோக்கி துப்பாக்கி யால் சுட்டார். 

ஆனால் அந்த அறையில் போதிய வெளிச்சம் இல்லாத தால் அந்த குண்டு குறி தவறி, அந்த கூட்டத்தில் இருந்தவர் மீதே பாய்ந்தது.

குண்டு பாய்ந்த நபர் தரையில் சரிந்தார். இந்தநிலை யில் நாதுராம் மற்றும் அவரது நண்பரும் கழிவறையில் உள்ள ஜன்னல் வழியாக தப்பித்த தாக அறிந்தோம். 

இந்த சம்பவம் நடந்து முடிந்த பின்னரே, வந்திருந் தவர்கள் தனிப்படை போலீசார் என்பது தெரிய வந்தது. 


அந்த நாளை எங்களால் மறக்கவே முடிய வில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

கொள்ளையர்கள் என நினைத்து...

தேஜாராமின் மகன் பிரகாஷ் சவுத்ரி கூறுகையில், “கொள்ளை யர்கள் என நினைத்து எங்கள் குடும்பத் தினரும், அக்கம் பக்கத் தினரும் தமிழக போலீ சாரை தாக்கினோம். 

அப்போது எனது தந்தை யுடன், பெரிய பாண்டியன் கடுமையாக மோதிக் கொண்டு இருந்தார். 

இந்தநிலை யில் எதிர் பாராத விதமாக அக்கூட்ட த்தில் இருந்தவர் வைத்திருந்த துப்பாக்கி யில் இருந்து குண்டு வெளியேறி பெரிய பாண்டியன் உயிரி ழந்தார். 

அவர்கள் போலீசார் என்பது எங்களுக்கு தெரியாது. கொள்ளை யர்கள் என்று நினைத்து தான் தாக்கினோம்”, என்றார்.


போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் துப்பாக்கி சூட்டில் பலியான விவகார த்தில், தேஜாராமின் பிள்ளைகள் தெரிவித்த கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings