எங்கு சென்றாலும் வழி காட்டும் கூகுள் மேப்பின் புதிய வசதி !

0
டிராபிக் கில் சிக்கி தவிக்கும் பைக் ஓட்டுநர் களுக்கு கூகுள் நிறுவனம் தனது கூகுள் மேப்பில் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

எங்கு சென்றாலும் வழி காட்டும் கூகுள் மேப்பின் புதிய வசதி !
கூகுள் நிறுவன த்தின் கூகுள் மேப் பயன் படுத்தாத நபர்கள் யாருமே இல்லை என கூறலாம். 

வழி தெரிய வில்லை என்றால் முதலில் நமக்கு நினைவில் வருவது கூகுள் மேப் தான். யாரிடமும் வழி கேட்க வேண்டாம். 
செல்ல வேண்டிய இடத்தின் பெயரை டைப் செய்தால், நாம் இருக்கும் இடத்தி ற்கு எப்படி செல்ல வேண்டும் வழிகாட்டும்.

இது புதிய இடங் களுக்கு செல்பவர் களுக்கு பெரும் உதவியாய் உள்ளது. இந்நிலை யில் கூகுள் மேப், டூவிலர் மோடு என பிரத்யேக மாக புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 

இந்த வசதி முதல் முறையாக இந்தியாவில் தான் அறிமுகப் படுத்தப்பட் டுள்ளது.

இந்த வசதி மூலம் பைக் ஓட்டு நர்கள் டிராபிக் குறித்தும் பைக் செல்லும் வகையில் உள்ள சாலைகள் குறித்து எளிதாக கண்டறிய முடியும். 

இது குறித்து கூகுள் துணைத் தலைவர் சீசர் சென்குப்தா கூறியதாவது:-
உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகனச் சந்தையாக இந்தியா உள்ளது.  
வழுக்கை விழக் காரணம் என்ன? தெரியுமா?
இந்தியர்கள் பெரும் பாலும் பைக் பயணத்தின் போது உள்ளூர் அடையாள தலங்களை நினைவில் வைத்துக் கொள்ள விரும்பு வார்கள். 

அதன்படி வான ஓட்டிகள் செல்லும் வழியில் உள்ள உள்ளூர் அடையாளத் தலங்கள் அனைத்து தெளிவாக குறிப்பிடப் பட்டிருக்கும் என்று கூறினார்.

மேலும் இந்த வசதி அடுத் தடுத்து சில நாட்களில் மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப் படும் என்றும் தெரிவி த்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings