புத்தாண்டு என்றால், புதிய நாட்கள் மட்டும் பிறக்க வில்லை... அன்றைய இரவில் அலங்கரிக்கப்பட்ட புது உலகமும் பிறக்கிறது.
அனைத்து நாட்டு மக்களும் மதங்களை மறந்து வெகு விமரிசை யாகக் கொண்டாடும் ஒரே பண்டிகை, ஆங்கிலப் புத்தாண்டு மட்டுமே.
புதிய வருடத்தை வரவேற்பதற் காகவும், புதிய வாழ்க்கையை தேர்ந்தெடுப் பதற்காகவும், அனைத்து நாட்டு மக்களும் சந்தோஷ மாகப் புத்தாண்டைக் கொண்டாடு கிறார்கள்.
இதில், இந்தியாவும் விதிவிலக்கல்ல. சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா போன்ற
பெரு நகரங்களில் வருடத்தின் கடைசி நாளான 31-ந் தேதியின் மாலை வேளை யிலேயே புத்தாண்டு கொண்டா ட்டங்கள் களைகட்டி விடும்.
வாணவேடிக்கைகள், பளிச்சிடும் மின் விளக்குகள், ‘ஹேப்பி நியூ இயர்’ முழக்கங்கள் என்பதையும் தாண்டி, டூவீலர்களின் சாகசங்கள் இருந்தால் தான்
புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் முழுமையடைகிறது என்ற நிலை சென்னையில் மட்டுமல்ல, அனைத்து பெரு நகரங்களிலுமே இருக்கின்றன.
தார்ச் சாலையில் நெருப்புப் பறக்க... மோட்டார் சைக்கிள் ஸ்டாண்டு களை உரசியவாறு, விண்ணைக் கிழிக்கும் சைலன்சர் சத்தத்துடன் ஆயிரத்தி ற்கும் மேற்பட்ட இளைஞர்கள்,
ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு செல்வது ‘கெத்’ என நினைக்கி றார் கள். ஆனால், அது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்பது அவர்களு க்குத் தெரிவதில்லை.
மது போதையில் இவர்கள் செய்யும் இந்தச் செயல்கள், புத்தாண்டை குடும்பத் தோடு கொண்டாட வருபவர்களை பெரும் ஆபத்தில் சிக்க வைத்து விடுகின்றன.
தேவாலயங் களுக்கும், கோவிலுக்கும் செல்பவர்கள் கூட.... பயந்த படியே சாலையை கடக்கிறார்கள்.
குறிப்பாக சென்னை யில் உள்ள மெரினா, வாலாஜா, அண்ணா, பழைய மகாபலிபுரம், கிழக்கு கடற்கரை போன்ற சாலைகளில் மோட்டார் சைக்கிள், கார்களின் அட்டகாசம் அதிகமாக இருக்கும்.
இந்த சாலை களில் பயணிப்பது மட்டுமல்ல..., கடப்பதும் கடினமான ஒன்று தான். சென்னை யில் மட்டுமின்றி, தமிழகத்தின் மற்ற பகுதிகளி லும் இதே நிலை தான் நீடிக்கிறது.
இத்தகைய கலாசாரம் எப்படி ஆரம்பித்தது என்பதை விட, அது ஏன் இன்றும் தொடர்கிறது என்பதே பெரும் கேள்விக் குறி.
புத்தாண்டை கொண்டாட நிறைய வழிகள் இருக்கிறது. ஆனால் இளைஞர் களுக்கு பைக் ஓட்டுவதும், வீலிங் செய்வதும், பைக்கில் நடன மாடுவதும் தான் கொண்டா ட்டமாக தெரிகிறது.
வண்டியின் சத்தத்தை அதிகப்ப டுத்தும் பில்டர்களை பொருத்துவது, சைலன்சரில் நெருப்பு வர செய்வது, எஞ்ஜினை டியூனிங் செய்வது என... ஒரு நாள் கூத்திற்காக பல ஆயிரங்களை செலவழிக் கிறார்கள்.
இதில் என்ன கொடுமை என்றால்... பெரும் தொகையை செலவழிப்ப வர்கள், அதை ரசித்து ஓட்ட உயிரோடு இருப்ப தில்லை.
என்னுடைய மெக்கானிக் கடையி லேயே இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்கிறது என்று சோகமாக சொல்கிறார், புதுப்பேட்டையை சேர்ந்த மெக்கானிக் ஒருவர்.
இவர் சொல்வதை போன்றே புத்தாண்டை குதூகலமாக கொண்டாட நினைப்பவர்கள், அதை முழுவது மாக கொண்டா டாமலேயே விபத்தில் சிக்கி விடுகின்றனர்.
இதனால் விபத்தில் சிக்கியவ ருக்கும், அவரது குடும்பத் தினருக்கும் புத்தாண்டு சோகமய மாக தொடங்கு கிறது.
“2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் சென்னையில் ஏற்பட்ட சாலை விபத்து களில், 5 பேர் உயிரிழந் துள்ளனர். 2016-ம் ஆண்டு 900 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன.
அதில் 6 பேர் இறந்து ள்ளனர். 2017-ம் ஆண்டின் புத்தாண்டு, 6 பேரை காவு வாங்கியது. இவை அனைத்தும் புத்தாண்டு பிறந்த ஒரே இரவில் நிகழ்ந்தவை..!
இதில், சோகச் செய்தி என்ன தெரியுமா? பைக் சாகசத்தில் ஈடுபடாமல்... சாலையின் ஓரத்தில் தன் குடும்பத்தினருடன் பைக்கில் சென்றவர்களும்,
நடை பாதைவாசிகளும் தான் அதிகம் பாதிக்கப்படு கிறார்கள் என்று ஆதங்கப் படுகிறார், ராதா கிருஷ்ணன்.
சாலை விபத்துகளை தடுக்க போராடும் ‘தோழன்’ தன்னார்வ அமைப்பின் ஒருங்கிணைப் பாளரான இவர், புத்தாண்டில் நடக்கும் விபத்து களையும்,
அதனால் ஏற்படும் உயிரிழப்பு களையும் சர்வே எடுத்து வருகிறார். அதில் தமிழ்நாடு முதலிடம் பிடிக்கிறது.
இத்தகைய அலட்சிய மான உயிர் இழப்புகளை தவிர்ப்பதே தோழன் அமைப்பின் குறிக்கோள். ஊரே புத்தாண்டை சந்தோஷ மாக கொண்டாடிக் கொண்டிருக்கும்.
அந்த சூழலில் நாங்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுகிறோம். அடுத்தவரின் உயிரை தக்க சமயத்தில் காப்பாற்றுவதே எங்களுடைய கொண்டா ட்டம். இருப்பினும் அதில் பல சிக்கல்கள் இருக்கின்றன.
விபத்தில் சிக்குபவர்களை மீட்க செல்வதும், அவர்களை மருத்துவ மனைக்கு அழைத்து செல்வதும் பெரும் சவாலாக அமைந்து விடும்.
ஏனெனில் வழக்கத்தை விட, சாலைகளில் அதிக வாகனங்கள் சுற்றிக் கொண்டிருக்கும் அதில் சிலர் மது போதையில் அங்கும் இங்குமாக தள்ளாடிய படி ஓட்டுபவர்கள்.
அவர்களது உயிரையும் காப்பாற்ற வேண்டும், ஆம்புலன்ஸில் துடிப்பவரின் உயிரையும் காப்பாற்ற வேண்டும். இத்தகைய நெருக்கடி யில் தான் புத்தாண்டு எங்களுக்கு பிறக்கிறது.
இத்தனை சவால் களை சமாளித்து மருத்துவ மனைக்கு சென்றாலும், அங்கு உரிய சிகிச்சை கிடைக்குமா..? என்பது சந்தேகம் தான்.
ஏனெனில் புத்தாண்டு நள்ளிரவில் நூற்றுக் கணக்கான விபத்துகள் நடப்பதால்.... அரசு மருத்துவ மனையே பரபரப்பாக இருக்கும்.
மருத்து வர்களும், செவிலியர் களும் எத்தனை பேரை காப்பாற்ற முடியும் சொல்லுங்கள்..? என்ற நியாய மான கேள்வியை முன் வைக்கிறார், ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர்.
புத்தாண்டு இரவில் நடக்கும் சாலை விபத்து களுக்கு, ‘நியூ இயர் பார்டிகளும்’ ஒரு காரணமாகின்றன.
ரூ.2 ஆயிரம் இருந்தால் போதும், கிழக்கு கடற்கரை சாலைகளில் குதூகலமான புத்தாண்டை கொண்டாட லாம்.... என்பது போன்ற பல விளம் பரங்கள் பேஸ்புக்கில் கொட்டிக் கிடக்கின்றன.
அவர்கள் நிர்ணயிக்கும் தொகையை செலுத்தி விட்டால் போதும்... ஆட்டம் பாட்டத் துடன், உணவு, மது போன்ற பொருட்களும் தாராளமாக கிடைக் கின்றன.
அதனால் 18 வயதி லிருந்து 25 வயதுக்குட் பட்டவர்கள் பணத்தை செலுத்தி.... ஈ.சி.ஆர். மற்றும் ஓ.எம்.ஆர். பகுதிகளுக்கு கிளம்பி விடுகி றார்கள்.
இத்தகைய கொண்டாட் டங்கள் அதிகாலை 3 மணியோடு முடிந்து விடுவதால்... போதை தலைக் கேறியப்படி வண்டி கிளம்புகிறது.
இதில் அதிர்ஷ்டம் இருப்ப வர்கள் பத்திரமாக வீடு திரும்ப.... மற்றவர் களை ஆம்புலன்ஸ் மருத்துவ மனைக்கு அழைத்து செல்கிறது.
போலீஸ் பாதுகாப்பு சாலை முழுக்க இருந்தாலும், அதை இளைஞர்கள் பொருட் படுத்துவதே இல்லை. ஹெல்மெட் அணிவது இல்லை.
சிக்னல் களை மதிப்பது இல்லை. பொது மக்களை பயமுறுத் துவது, மதுபோதை யில் வண்டி ஓட்டுவது என அவர்களின் அட்டகாசம் பெருகி க்கொண்டே இருக்கிறது.
அதுபற்றி போலீஸ் வட்டாரங் களிடம் விசாரி த்தோம். வாகனங்களை தாறுமாறாக ஓட்டுபவர்களின் மீது வருடந்தோறும் வழக்குகள் பதியப்படு கின்றன.
ஒருசிலரது ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்திருக்கிறோம். இந்த வருடமும், கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களின் ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்ய ஆர்.டி.ஓ. அலுவலகங்களுக்கு பரிந்துரை
அனுப்பப் படுவதோடு, கடுமையான பிரிவுகளில் வழக்கு பதியப்படும் என்று கண்டிப்போடு பேசினர்.
போலீஸ் கெடுபிடி, வழக்கு, ஓட்டுநர் உரிமம் ரத்து... என எத்தனை கட்டுப் பாடுகள் கொண்டு வந்தாலும், பெற்றோரது கட்டுப்பாடு இல்லை யென்றால், ஒன்றும் செய்ய இயலாது.
ரத்தான உரிமத்தை திரும்ப பெறலாம். ஆனால் பறிபோன உயிரை திரும்ப பெற முடியாது. அதை உணர்ந்தபடி பிள்ளைகளின் புத்தாண்டு கொண்டாட் டங்களை கட்டுப் படுத்துங்கள்.
அப்போது தான் புத்தாண்டு இனிக்கும்.
Thanks for Your Comments