செயற்கைக்கோளை ஏவ தயாராகும் வடகொரியா | North Korea launches satellite launch !

0
அணு ஆயுத சோதனை களை செய்து உலக நாடுகளை அதிர்ச்சி யில் ஆழ்த்தி வரும் வடகொரியா, அடுத்தக் கட்டமாக செயற்கைக் கோளை ஏவ தயாராகி உள்ளது. 


ஐநா, அமெரிக்கா மற்றும் உலக நாடுகளின் எச்சரிக்கை களை மீறி, கடந்த 2006 முதல் தொடர்ந்து அணு ஆயுத சோதனை களில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. 

இதை யடுத்து, ஐநா.வும் அமெரிக்கா வும் அந்நாட்டின் மீது கடுமை யான பொருளாதாரத் தடைகளை விதித் துள்ளன. 

இதையும் மீறி், எந்த நாட்டின் உதவியும் இன்றி தனது சொந்த முயற்சியில் செயற்கை கோளை வடகொரியா தயாரித் துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி யுள்ளது. 

இது பற்றி தென்கொரிய நாளிதழ் வெளியிட் டுள்ள செய்தியில், ‘வடகொரியா சமீபத்தில் புதிய செயற்கைக் கோளை வடிவமைத் துள்ளது.

அதற்கு, ‘க்வாங்மியாங்சாங்-5’ என்று பெயரிட் டுள்ளது. விரைவில் இது விண்ணில் ஏவப்பட உள்ளது. 

இதில் புவி கண்காணிப்பு சாதனை ங்கள் பொருத்தப் பட்டுள்ளன’ என்று கூறப்பட் டுள்ளது. 

வடகொரியா வின் அரசு நாளிதழான ரோடாங் சின்முன் வெளி யிட்டுள்ள செய்தி யில் இது உறுதிப் படுத்தப் பட்டுள்ளது. 

‘சர்வதேச சட்டப்படி இறை யாண்மை உள்ள ஒவ்வொரு நாடும் விண்ணில் செயற்கைகோளை ஏவும் உரிமையை பெற்றுள்ளது’ என்று அதில் கூறப்பட் டுள்ளது.

கடந்த அக்டோபரில் நடந்த ஐநா பொதுக் கூட்டத்தில் பேசிய வடகொரிய பிரதிநிதி கிம் இன்-ரியாங், ‘பொருளாதார முன்னேற்றம் 

மற்றும் வடகொரிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கில், எங்கள் நாடு 2016-2020ல் செயற்கைகோள் திட்டத்தை செயல் படுத்தும். 

அமெரிக்கா வின் மிரட்டலுக் காக செயற்கைகோளை ஏவும் உரிமையை விட்டுக் கொடுக்கவோ, மாற்றிக் கொள்ளவோ முடியாது.’ என்று தெரிவி த்தார். 

அதன்படி, செயற்கை கோள் திட்ட த்தில் வடகொரியா தற்போது வெற்றி பெற்றுள்ள தாக தெரிகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings