போயஸ் கார்டனில் சீல் வைக்கப்பட்ட அறைகள் திறப்பு !

0
போயஸ் கார்டனில் வருமான வரித்துறையினரால் சீல் வைக்கப்பட்ட 2 அறைகள் திறப்பு. போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்று வதற்கான முயற்சியில் தமிழக அரசு இறங்கி யுள்ளது.
போயஸ் கார்டனில் சீல் வைக்கப்பட்ட அறைகள் திறப்பு !
இதன் முதற்கட்ட பணிகள் காலை 7.30 மணியி லிருந்து நடை பெற்று வந்தன. மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் காவல்துறை, மாநகராட்சி, வருவாய்த் துறை, வருமான வரித்துறை அதிகாரிகள் என 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இப்பணி யில் ஈடுபடுத்தப் பட்டிருந் தனர். 

போயஸ் தோட்ட இல்லம் உள்ள நிலத்தின் மதிப்பீடு எவ்வளவு என்பது குறித்த பணிகள் காலையில் இருந்து வேகமாக நடைபெற்று வந்தது.

இந்த சூழ்நிலை யில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட வேண்டிய அவசியம் என்ன வென்ற கேள்வி யெழுந்தது. அன்மை யில் போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரித்துறை யினர் சோதனை நடத்தினர். 

அங்கிருந்த ஜெயலலிதா அறை மற்றும் பூங்குன்றன் அறைகளில் இருந்த லேப்டாப், பென்டிரைவ் ஆகியவை கைப்பற்றப் பட்டன. 
அப்போது இந்த 2 அறை களிலும் பல கோடி ரூபாய் மதிப்பி லான ஏராளமான ஆவணங்கள் இருந்தன. எனவே இந்த 2 அறை களையும் வருமான வரித்துறை யின் பூட்டி சீல் வைத்தி ருந்தனர். 

இந்த சூழ்நிலை யில் போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்த ஜெயலிலதா அறை மற்றும் பூங்குன்றன் அறைகள் இன்று திறக்கப் பட்டுள்ளன. அதில் வருமான வரித்துறை தீவிர சோதனை நடத்தினர். 

அங்கிருந்த ஏராளமான ஆவணங் களை இன்றைக்கும் வருமான வரித்துறை யினர் கைப்பற்றிய தாக தகவல் வெளியாகி யுள்ளது. 

நினைவு இல்லமாக மாற்றப் படக்கூடிய இந்த சூழ்நிலையில் இதற்கு மேலும் ஆவணங் களை அறைகளில் வைத்தி ருப்பது பாதுகாப்பாக இருக்காது 
என்ற காரணத் திற்காக அதிகாரிகள் இந்த முயற்சியில் ஈடுபட்டனர் என்று விளக்க மளிக்கப் பட்டுள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் 500க்கும் மேற்பட்ட 

போலீசார் காலை யிலிருந்தே பாதுகாப்பு பணியில் ஈடு படுத்தப் பட்டிருந் தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings