நெல் கொள்முதல் விலை.. தமிழக அரசு துரோகம் !

0
நெல் கொள்முதல் விலையில் தமிழக அரசு துரோகம் இழைத்துள்ளது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
நெல் கொள்முதல் விலை.. தமிழக அரசு துரோகம் !
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை யில், ''தமிழ் நாட்டில் நடைபெறும் எடப்பாடி பழனிசாமி தலைமை யிலான அரசால் விவசாயி களுக்கு எந்த நன்மையும் இல்லை என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப் பட்டிருக் கிறது. 

நடப்பாண்டில் தமிழக அரசு அறிவித்துள்ள நெல்லுக்கான குறைந்த பட்ச கொள்முதல் விலை இதை இறுதி செய்தி ருக்கிறது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் ஒன்றாம் தேதி குறுவை நெல் கொள்முதல் தொடங்கும். 

குறுவை நெல்லைக் கொள்முதல் செய்ய வசதியாக செப்டம்பர் 30-ம் தேதியே கொள்முதல் விலை அறிவிக்கப்பட்டு விடும். புதிதாக திறக்கப்படும் நெல் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கையும் அறிவிக்கப்பட்டு விடும். 

ஆனால், நடப்பாண்டில் 3 மாதங்கள் தாமதமாக நெல் கொள்முதல் விலை அறிவிக்கப் பட்டிருக்கிறது. அறிவிக்கப் பட்டுள்ள நெல் கொள்முதல் விலையும் போதுமான தல்ல. 
மத்திய அரசின் சார்பில் நெல் கொள்முதல் விலை கடந்த ஜூன் 21-ம் தேதி அறிவிக்கப் பட்டது. 

ஒரு குவிண்டால் சாதாரண ரக நெல்லுக்கு 1,550 ரூபாயும், சன்னரக நெல்லு க்கு 1,590 ரூபாயும் கொள்முதல் விலையாக வழங்கப் படும் என மத்திய அரசு அறிவித் திருந்தது. இதில் தமிழக அரசு எந்த மாற்றமும் செய்ய வில்லை.

ஒவ்வொரு ஆண்டும் வழங்கப் படுவதைப் போலவே இந்த ஆண்டும் தமிழக அரசின் ஊக்கத் தொகையாக சன்ன ரக நெல்லுக்கு குவிண்டா லுக்கு 70 ரூபாயும், சாதாரண ரக நெல்லுக்கு 50 ரூபாயும் சேர்த்து முறையே 1,660 ரூபாயும், 1,600 ரூபாயும் 

புதிய கொள்முதல் விலையாக தமிழக அரசு அறிவித் துள்ளது. இதன் மூலம் நெல்லுக்கு கட்டு படியாகும் விலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக ஆட்சி யாளர்கள் நிராகரித் துள்ளனர். 

மீண்டும் ஒரு முறை விவசாயி களின் முதுகில் குத்தியுள்ளனர். எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப் படி நெல்லுக்கான உற்பத்திச் செலவுடன் 50% லாபம் சேர்த்து வழங்க வேண்டும் 

என்று பல ஆண்டு களாக பாமக வலியுறுத்தி வரும் போதிலும், அதை தமிழக ஆட்சி யாளர்கள் கண்டு கொள்வ தில்லை. 
கோவை யில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்திய ஆய்வில் தமிழகத் தில் ஒரு குவிண்டால் நெல் உற்பத்தி செய்ய ரூ.1,424 செலவு ஆவதாக மதிப்பிடப் பட்டிருந்தது. 

லாபமே இல்லாமல் கிட்டத் தட்ட உற்பத்தி செலவை கொள்முதல் விலையாக அறிவிப்பது விவசாயி களுக்கு இழைக்கப் படும் துரோக மாகும்.

விளை பொருட் களுக்கு அவற்றின் உற்பத்தி செலவுடன் 50% லாபம் சேர்த்து வழங்க வேண்டும் என்பது தான் எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரை ஆகும். 

அதன்படி, ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,136 கொள்முதல் விலை வழங்கப்பட வேண்டும். 

அதன்பின் 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ஆண்டுக்கு 7% விலை உயர்வு என்று வைத்துக் கொண்டாலும், 3 ஆண்டு களுக்கு 21%, அதாவது ரூ.448 சேர்த்து ஒரு குவிண்டால் சாதாரண நெல்லுக்கு 2,584 ரூபாயும், சன்னரக நெல்லுக்கு 2,700 ரூபாயும் வழங்குவது தான் நியாய மாகும். 
ஆனால், நியாயப்படி வழங்கப்பட வேண்டிய விலையில் குவிண்டாலுக்கு ரூ.1000 குறைத்து வழங்குவது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியவே முடியாது.

கடந்த காலங்களில் வறட்சியாலும், வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு பயனுள்ள வகையில் எந்த உதவியும் தமிழக அரசால் வழங்கப்பட வில்லை. 

பயிர்களுக்கான காப்பீட்டுத் தொகை கூட முறையாக வழங்கப் படாததால் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று 20 விவசாயிகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளனர். 

விவசாயிகளுக்கு தொடர்ந்து இழைக்கப் பட்டு வரும் துரோகம் தான் இதற்குக் காரணமாகும். 

ஏற்கெனவே இழைக்கப் பட்ட துரோகங்கள் போதாது என்று கொள்முதல் விலையை நிர்ணயிப்பதிலும் துரோகம் இழைத்தால்  விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்ற அவல நிலை தமிழகத்தில் ஏற்பட்டு விடும்.

எனவே, விவசாயி களைக் காப்பாற்றும் நோக்குடன் நெல்லுக் கான கொள்முதல் விலையை உயர்த்தி, ஒரு குவிண்டால் சன்ன ரக நெல்லுக்கு 2,700 ரூபாயும், சாதாரண ரக நெல்லுக்கு 2,584 ரூபாயும் வழங்க வேண்டும். 
அத்துடன் கரும்புக் கான கொள்முதல் விலையையும் டன்னுக்கு ரூ.4,000 ஆக உயர்த்தி உடனடி யாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக ஆட்சி யாளர்களை கேட்டுக் கொள்கிறேன் என்று அன்புமணி தெரிவித் துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings