பலதார வழக்கத்தை தடை செய்ய வெண்டும்... பெண்கள் !

0
முத்தலாக் போன்று பலதார திருமணத்தையும் தடை செய்ய வேண்டும் என தேசிய முஸ்லிம் பெண்கள் அமைப்பு (ராஷ்ட்ரியவாதி முஸ்லிம் மகிளா மன்ச்) மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பலதார வழக்கத்தை தடை செய்ய வெண்டும்... பெண்கள் !
முத்தலாக் வழக்கத்துக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் முஸ்லிம் மகளிர் அமைப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது, நிக்காஹ் ஹலாலா, பலதார மணம் ஆகிய வற்றையும் தடை செய்யக் கோரினர். 

ஆனால் இவற்றை பிறகு விசாரிப்ப தாக கூறிய உச்ச நீதிமன்றம் முத்தலாக் வழக்கை மட்டும் விசாரித்தது. இதில் கடந்த ஆகஸ்ட் மாதம், முத்தலாக் சட்ட விரோதம் என தீர்ப்பு வழங்கியது. 
இதை யடுத்து முத்தலாக் தடை மசோதாவை மக்களவை யில் மத்திய அரசு கடந்த வியாழக் கிழமை நிறை வேற்றியது. இந்த மசோதா மாநிலங் களவையில் ஜனவரி 2-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் பலதாரமணம், நிக்காஹ் ஹலாலாவை யும் தடை செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் தேசிய முஸ்லிம் பெண்கள் அமைப்பின் நிறுவனரும் அதன் தலைவரு மான பரா பயாஸ் வலியுறுத்தி யுள்ளார். 
உச்ச நீதிமன்ற வழக்கறிஞ ரான பரா பயாஸ், முத்தலாக் வழக்கின் மனுதாரர்களில் ஒருவர் ஆவார். இது தொடர்பாக பரா பயாஸ் கூறும் போது, முத்தலாக்கை விட பலதாரமணம் கொடுமை யானது. 

இதற்கான வாய்ப்பு முஸ்லிம் ஆண்களுக்கு அளிக்கப் பட்டுள்ள தால் தான் அவர்கள் தங்கள் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, வேறு திருமணத்துக்கு தயாரா கின்றனர். 

இத்துடன், விவாகரத்து செய்யப் பட்ட பெண் மீண்டும் தனது கணவரை மணம் முடிக்க நிக்காஹ் ஹலாலா எனும் ஒழுக்கக் கேடான முறையும் கடைப் பிடிக்கப் படுகிறது.

இவற்றை தடை செய்ய கடந்த 1985-ல் ஷாபானு வழக்கின் போது மத்திய அரசுக்கு வாய்ப்பு கிடைத்தது. 
ஆனால் அந்த வாய்ப்பை மத்திய அரசு தவற விட்டது. எனவே முத்தலாக் போன்று மற்ற இரண்டை யும் தடை செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்” என்றார்.

பரா பயாஸ், உத்தர பிரதேசம், முராதாபாத்தை சேர்ந்தவர். இந்து, கிறிஸ்தவ மதங்களை போல் முஸ்லிம் பெண்களு க்கும் ஆண்களு க்கு 

இணையான பாதுகாப்பு அளிக்க பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் எனவும் உச்ச நீதிமன்ற த்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு உச்ச நீதிமன்றத் தால் இன்னும் ஏற்கப் படாமல் நிலுவையில் உள்ளது.

பரா பயாஸ் மேலும் கூறும்போது, “ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கருத்து களால் மிகவும் ஈர்க்கப் பட்டதால் இந்த புதிய அமைப்பை தொடங் கினேன். 

உ.பி., பிஹார், டெல்லி, ராஜஸ்தான், உத்தராகண்ட் ஆகிய மாநிலங் களில் சுமார் ஆயிரம் பெண் உறுப்பி னர்கள் எங்கள் அமைப்பில் உள்ளனர்” என்றார்.

முத்தலாக் வழக்கத் தால் பாதிக்கப் பட்ட ரிஜ்வானா (33) என்ற ரயில்வே அலுவலரும் பலதார மணத்தை தடை செய்ய வேண்டும் என கோரியுள்ளார். 
முத்தலாக் கூறுவோரு க்கு சிறை தண்டனையை 7 ஆண்டு களாக உயர்த்த வேண்டும் என்றும் இவர் வலியுறுத்தி யுள்ளார். இது போல் ரஜியா (24) என்ற பெண்ணும் பலதார மணத்துக்கு எதிர்ப்பு தெரிவித் துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings