பருப்பு கறி சமையல் தெரிந்த ஜனாதிபதி... ஒபாமா !

0
வட இந்தியா வில் பிரபலமான பருப்பு கறிக்கான சமையல் குறிப்பை பெற்ற முதல் அமெரிக்க ஜனாதிபதி நான் தான் என ஒபாமா வேடிக்கையாக தெரிவித்துள்ளார்.
பருப்பு கறி சமையல் தெரிந்த ஜனாதிபதி... ஒபாமா !
இந்தியா தனியார் ஊடக நிறுவன த்தின் மாநாடு ஒன்றுக்கு ஒபாமா விருந்தி னராக வந்துள்ளார். புதுடெல்லி யில் நடை பெற்ற நிகழ்ச்சி யில் ஒபாமாவு டனான கலந்துரை யாடலும் நடந்தது.

அதில் அவர் பேசுகை யில், "நேற்று இரவு எனக்கு தால் (பருப்பு) பரிமாறப் பட்டது. பரிமாறியவர் அது எப்படி செய்யப் பட்டது என்று விளக்க ஆரம்பித்தார். ஆனால் நான் அவரை தடுத்து நிறுத்தினேன். 

ஏனென்றால் எனக்கு தால் எப்படி செய்வது என்பது தெரியும். கல்லூரி மாணவனாக இருந்த போது எனது அறையில் உடன் இருந்த இந்திய நண்பரிட மிருந்து அதைக் கற்றேன்" என்றார்.

மேலும் அவர் பேசுகையில், "கீமாவும் நன்றாக செய்வேன். சிக்கன் சுமாராக செய்வேன். ஆனால் சப்பாதி மிகக் கடினம். செய்ய முடியாது" என்றார்.

இந்த விழாவில் கலந்து கொண்ட ஒபாமா கலந்துரை யாடலில் பேசும் போது சுவாரசிய மாகவும், நகைச் சுவையாகவும் பேசினார். 
முன்னதாக, பெண் பத்திரிகை யாளர் ஒருவர் பார்வை யாளர்கள் தரப்பி லிருந்து கேள்வி கேட்க முற்பட்டார். 

ஆனால் அவரை தடுத்த ஒபாமா, நீங்கள் பத்திரிகை யாளர். எப்போதும் உங்களுக்கு பேச வாய்ப் பிருக்கும். மற்றவர்கள் கேள்வி கேட்கட்டும் என்று கூறினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings