பிரேமம் தந்த புகழின் வழியாக நிவின் பாலி... பேட்டி !

0
மலையாளப் படவுலகைத் தாண்டி தென்னிந்திய சினிமா மொத்தமும் கவனிக்கப் படும் நாயகனாக உருவாகி யிருக்கிறார் நிவின் பாலி. 
பிரேமம் தந்த புகழின் வழியாக  நிவின் பாலி... பேட்டி !
‘நேரம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களு க்கும் பரிச்சயமான அவர் ‘பிரேமம்’ தந்த புகழின் வழியாக இரு மொழிப் படங்களில் நடிக்கத் தொடங்கி யிருக்கிறார். 

அதில் ஒன்று அவரது நடிப்பில் தற்போது வெளியாக விருக்கும் ‘ரிச்சி’. “வழக்க மாக எல்லா மொழிப் படங் களும் நிறையப் பார்ப்பேன். இங்கே விஜய் சேதுபதி வித்தியாச மான படங்களைத் தேர்வு செய்து நடிக்கிறார். 

‘விக்ரம் வேதா’ படத்தில் விஜய் சேதுபதியின் தோற்ற த்தைப் பார்த்த போது மிரண்டேன். இந்த மாதிரியான படங்களில் நாம் எப்போது நடிக்கப் போகிறோம் என நினைத்தேன். 

எனக்கும் அதுபோல அமையத் தொடங்கி யிருப்பது எதிர்பாராத ஆச்சரியம்” என்று வியப்பு கலந்த தொனி யுடன் பேசத் தொடங்கினார் நிவின் பாலி.

‘ரிச்சி’ படத்தை எதற்காகத் தேர்வு செய்தீர்கள்?
இயக்குநர் கவுதம் ராமச்சந்திரன் ‘உலிதாவாரு கண்டந்தே’ (Ulidavaru Kandanthe) என்ற கன்னடப் படத்தின் டி.வி.டியைக் கொடுத்துப் பார்க்கச் சொன்னார். தமிழில் மறு ஆக்கம் செய்யப் போகிறேன், நீங்கள் நடிக்க வேண்டும் என்றார். 

மலை யாளத்தில் இப்படியொரு கதா பாத்திரத்தில் நான் நடித்ததில்லை. வில்லத் தனம் கலந்த ரவுடி கதாபாத்திரம் என்பதால் ஒப்புக் கொண்டேன். இப்படத்து க்கு நிச்சயம் வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

மறு ஆக்கம் என்றால் பெரிய மெனக்கெடல் இருக்காதே?

‘உலிதாவாரு கண்டந்தே’ கன்னடப் படத்தைவிட இன்னும் சிறப்பாகச் செய்துவிட முடியாது. அந்தப் படத்தின் இயக்குநர் ரக்‌ஷித்தின் பாணி என்பது எல்லா விதத்திலும் வித்தியாசமானது. 

இருந்தாலும் அப்படியே காட்சிக்குக் காட்சி மறு ஆக்கம் செய்ய வில்லை. தமிழுக்கு ஏற்ப முழுமை யாக மாற்றி யிருக்கிறோம். ரக்‌ஷித் இப்போது இந்தப் படத்தைப் பார்த்தால் புதுப்படம் போல் தான் தெரியும். 

சில இடங்களில் மட்டுமே கன்னடப் படத்தின் சாயல் இருக்கும். ஒரு கதா பாத்திரத்தை இரண்டு நடிகர் களிடம் கொடுத்து நடிக்க வைத்தால் எப்படி வேறுபடு கிறது என்று ‘ரிச்சி’யில் பார்க்க முடியும்.

தமிழ்த் திரையுலகம் பற்றி உங்கள் கருத்து என்ன?
திரையுலகில் அறிமுகமான போது, தமிழில் நடிக்க வேண்டும் என எண்ணினேன். கேரளத் திரையுல கிலிருந்து காணும் போது, தமிழ்த் திரையுலகம் பெரியது. திறமை சாலிகளை வரவேற்பார்கள். 

இப்படித் தான் ஒரு படம் இருக்க வேண்டும் என்ற எந்தவொரு கட்டுப்பாடும் இருக்காது. மற்ற மாநிலக் கதா நாயகர்கள் தமிழில் நடித்தால் அவர்களை வரவேற்கும் நல்ல உள்ளங்கள் கொண்ட வர்கள் தமிழ்ச் சகோதரர்கள். 

அவர்களிட மிருந்து என்னை நான் பிரித்துப் பார்க்க வில்லை. இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனோடு இணைந்து ‘நேரம்’ படத்தைக் கொடுத்தேன். தமிழில் நூறு நாட்கள் ஓட வேண்டும் என நினைத்தோம். 

ஆனால், அது நடக்க வில்லை. இரண்டாவ தாக இணைந்த ‘பிரேமம்’ தமிழ் நாட்டில் சில திரையரங்கு களில் இருநூறு நாட்கள் ஓடியது. எதையுமே நாங்கள் திட்ட மிடவில்லை.

பொறியாளராகப் பணி புரிந்து கொண்டிருந்த உங்களுக்கு நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போது வந்தது?

கடந்த 2008-ம் ஆண்டு வரை இன்ஃபோசிஸ் நிறுவன த்தில் பணிபுரிந்து வந்தேன். தினமும் ஒரே மாதிரியான வேலை ஒரு கட்டத்தில் போரடிக்கத் தொடங் கியது. எனது வாழ்க்கை அப்படி இருக்கக் கூடாது என நினைத்தேன். 

இது என் வாழ்க்கை அல்ல என்ற முடிவோடு மென்பொருள் உருவாக்கும் வேலையைத் தூக்கி எறிந்தேன். பிறகு இரண்டு ஆண்டுகள் சும்மா இருந்தேன். அப்போது தான் நடிப்பைப் பற்றி நண்பர்க ளோடு பேசத் தொடங் கினேன். 

அதற்கு முன்பாக, எனக்கும் நடிப்பு ஆசை இருந்தாலும் அதுவொரு ஓரமாக இருந்தது. குறும் படங்கள், சிறு முதலீட்டுப் படங்கள் எனப் பயணித்தே இவ்வளவு தூரம் வந்துள்ளேன்.

சினிமாவுக்காக வேலையை விட்டது பற்றி வீட்டில் எதுவும் சொல்ல வில்லையா?
குணச்சித்திரக் கதா பாத்திரத்தில் நடித்துக் கொண்டே யாராவது நாயகனாக நடிக்க அழைத்தால் மாறலாம் என்ற எண்ணத் தோடு சுற்றிக் கொண்டி ருந்தேன். 

கடவுளின் ஆசீர்வாதத் தால் நாயகனாக நடித்த முதல் படத்துக்கே நல்ல வரவேற்பு கிடைத்தது. குடும்பத்தினர் ‘சினிமாவா’ என்று முதலில் தயங்கி னார்கள். சினிமாவில் முயற்சி செய்து பார்க்கிறேன். 

எதுவும் சரிவர வில்லை என்றால் மீண்டும் வேலைக்குச் சென்று விடுகிறேன் எனக் குடும்பத் துடன் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு தான் கேமரா முன்பாக நின்றேன். சினிமா என்னைக் கைவிட வில்லை.

நெருங்கிய நண்பர்கள்?

சிவ கார்த்திகேயன் எனக்கு நெருங்கிய நண்பர். அவரோடு தொடர்ச்சி யாகப் பேசுவேன். விக்ரம் சார், ஜெயம் ரவி, தனுஷ், த்ரிஷா, மஞ்சிமா மோகன் எனப் பலர் இருக்கி றார்கள். 
சென்னை வரும் போதெல்லாம் யாரெல்லாம் இருக்கி றார்களோ பார்த்துப் பேசுவேன். ‘பிரேமம்’ படத்துக்குப் பிறகு நான் என்ன செய்யப் போகிறேன் என்று அனைவரும் எதிர் பார்த்தார்கள். 

‘பெங்களூர் டேஸ்’, ‘1983’ போன்ற படங்கள் வெளியான போது இங்குள்ள நண்பர்கள் கூறும் கருத்து களைக் காது கொடுத்துக் கேட்டேன். அதே போன்று ‘ரிச்சி’ பற்றியும் அவர்கள் கூறவுள்ள கருத்துக ளுக்காகக் காத்திரு க்கிறேன்
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings