தட்கல் முன்பதிவில் சாப்ட்வேர் ஒன்றின் மூலம் செய்யப்பட்ட மோசடி அம்பலம் ஆகி இருக்கிறது. சிபிஐ நடத்திய விசாரணையில் இந்த மோசடி அம்பலம் ஆகி உள்ளது.
இதற்காக 'நியோ' என்ற சாப்ட்வேர் ஒன்று பயன்படுத்தப் பட்டது கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது. இதை கண்டு பிடித்த 'அஜய் கார்க்' என்ற நபர் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
இதன் செயல்பாடும், இதன் மூலம் ரயில்வே துறை எப்படி எல்லாம் ஏமாற்றம் அடைந்து இருக்கிறது என்பதும் தலை சுற்றும் வகையில் இருக்கிறது.
சாப்ட்வேர்
தற்போது தட்கலில் சாதாரண வகுப்பு முன்பதிவு 10 மணிக்கும், ஏசி வகுப்பு முன்பதிவு 11 மணிக்கும் ஆரம்பிக் கிறது. சரியாக முதல் நாள் மட்டுமே இப்படி தட்கலில் புக் செய்ய முடியும்.
ஆனால் இதில் மொத்த மாக புக் செய்ய 'நியோ' என்ற சாப்ட்வேர் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ஐஎஸ்ஆர்டிசி சாப்ட்வேரை ஏமாற்றி ரயில் டிக்கெட் புக் செய்ய முடியும் என்று கூறப்பட் டுள்ளது.
எப்படி செயல்படும்
இதன் மூலம் நம்மிடம் செய்யப்படும் பாதுகாப்பு சோதனை களை அனைத்தை யும் தவிர்த்து விட்டு டிக்கெட் புக் செய்ய முடியும். புக்கிங் தொடங்கு வதற்கு முன்பு நம்முடைய விவரங்களை கொடுத்தால் புக்கிங் திறந்த வுடன்
அதுவே அனைத்து தகவல் களையும் கொடுத்து தானாக மொத்தமாக புக் செய்து விடும். இதன் காரணமாக மற்ற பயணி களுக்கு டிக்கெட் கிடைக்காமல் போகும்.
பெரிய லாபம்
இந்த சாப்ட்வேரை கண்டுபிடித்த அஜய் கார்க் என்பவர் இதன் மூலம் நிறைய சம்பாதித்து இருக்கிறார். அதே போல் புக்கிங், டிராவல்ஸ் நிறுவன ங்களும் இதன் மூலம் நிறைய சம்பாதித்து இருக்கிறது.
ரயில் டிக்கெட்டை விட பல மடங்கு விலை வைத்து இந்த டிக்கெட்கள் விற்கப் பட்டு இருப்பது அம்பலம் ஆகி உள்ளது.
கைது செய்யப்பட்டார்
தற்போது இந்த செயலை செய்த கார்க் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவருடன் உதவியாக இருந்த அணில் குப்தா என்ற நபரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
சிபிஐ இவர்களை தீவிரமாக விசாரித்து வருகிறது. இதன் மூலம் இவர்கள் இருவரும் லட்சக் கணக்கில் சம்பாதித்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
Thanks for Your Comments