நடிகர் ரஜினிகாந்த் நாளை தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிக்கிறார். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் உள்ளவர் ரஜினிகாந்த்.
இவருக்கு வயது வித்தியாச மின்றி பட்டிதொட்டி யெங்கும், ரசிகர்கள் உள்ளனர். பெரியவர் முதல் குழந்தைகள் வரை இவரது நடிப்பு மற்றும் ஸ்டைலு க்கு ரசிகர்கள்.
திரைப் படங்களில் மட்டுமின்றி அவ்வப்போது பொது வெளியிலும் அரசியல் கருத்துக்களை கூறியவர் ரஜினிகாந்த்.
அரசியல் எதிர்பார்ப்பு
ரஜினி காந்த்தின் இந்த நடவடிக்கை களால் அவர் அரசியலில் ஈடுபட போகிறார் என்ற பேச்சு 1990கள் முதலே இருந்தது.
ஆனால் ரஜினிகாந்த் இது வரையில் அந்த விஷயத்தில் பிடி கொடுக்கவே யில்லை. நடிப்பு மற்றும் ஆன்மீகம் ஆகிய இரண்டையும் மட்டும் இரு கண்களாக பாவித்து வருகிறார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் அறிவிப்பு
இந்த நிலையில், ரஜினிகாந்த் நடிப்பு துறையில் இருந்து ஓரளவுக்கு விலகி, அரசியலில் இறங்க உள்ளதாக இப்போது தகவல்கள் வெளியாகி யுள்ளன.
சென்னை யில், கடந்த 5 நாட்களாக ரசிகர் களை சந்தித்து வருகிறார் ரஜினிகாந்த். டிசம்பர் 31ம் தேதி தனது அரசியல் திட்டத்தை வெளியிடப் போவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.
நாளை அறிவிப்பு
நாளை காலை 8.30 மணியளவில் கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் 6வது நாளாக ரசிகர் களை சந்திக்கிறார் ரஜினி. அப்போது அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.
நண்பகல் நேரத்தில், அவர் ரசிகர்க ளுடனான சந்திப்பை நிறைவு செய்து விட்டு, ரசிகர்கள் முன்னிலை யிலேயே தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிக்க உள்ளார்.
அரசியல் வடிவம்
ரஜினியின் அரசியல் பிரவேசம் எப்படி யான வடிவுடைய தாக இருக்கும் என்பது ரகசிய மாக வைக்கப் பட்டுள்ளது. நாளை தான் அது வெளியாகும். இந்த தகவல் களால் அரசியல் வட்டார த்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
ஊடகங் களும் நாளைய ரஜினி அறிவிப்பு செய்தியை உடனுக்குடன் வழங்க ஆயத்தமாகி வருகின்றன.
ரஜினி ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் அந்த அறிவிப்பு நாளை வெளியாவ தால் தமிழகம் முழுக்க ரஜினி ரசிகர்கள் நடுவே இதுவே இப்போது பேசு பொருளாகி யுள்ளது.
Thanks for Your Comments