சவுதி அரேபியாவில் அடுத்த ஆண்டு முதல் திரைப் படங்கள் திரை யிடப்படும் என அந்நாட்டு அரசு அறிவித் துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியா வில் பல்வேறு பொழுது போக்கு நிகழ்ச்சி களுக்கு தடை அமலில் உள்ளது.
திரைப் படங்களுக்கும் அனுமதி வழங்கப் படுவதில்லை. இந்நிலையில் அடுத்த ஆண்டு தொடக்க த்தில் இருந்து திரைப் படங்கள் திரையிட அனுமதி அளிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து அந்நாட்டு தகவல் மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் அவாத் பின் சலே அலாவாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ள தாவது:
திரைப் படங்களுக்கு அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளோம். திரைப் படங்கள் திரையிட உரிமம் வழங்குவது குறித்து ஆடியோ வீடியோ ஊடக ஒழுங்குமுறை ஆணையம் பரிசீலனையை தொடங்கி யுள்ளது.
அதன்படி, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் முதல் திரைப்படம் திரை யிடப்பட வாய்ப்புள்ளது எனக் கூறினார்.
அதன்படி, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் முதல் திரைப்படம் திரை யிடப்பட வாய்ப்புள்ளது எனக் கூறினார்.
Thanks for Your Comments