திண்டுக்கல்லில் செட்டாப் பாக்ஸ் வாங்க, கலெக்டர், தாசில்தார் பெயரை கூறி 'கேபிள் டிவி' ஆப்பரேட்டர் கள் வசூல் வேட்டை யில் ஈடுபடுவ தால் பொது மக்கள் கொதிப்படைந் துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட த்தில் 306 ஊராட்சி, ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 23 பேரூராட்சிகள், 14 ஒன்றி யங்கள் உள்ளன.
இங்குள்ள வீடுகளில் கேபிள் டிவிகளுக்கு செட்டாப் பாக்ஸ் அரசு சார்பில் வழங்கப் படுகிறது.
இதற்கு ரூ.200 மட்டுமே கட்டண மாக வசூலிக்க வேண்டும். ஆனால் ரூ.550 முதல் ரூ.650 வரை வசூலிக் கின்றனர்.
இது திண்டுக்கல் பாலகிருஷ்ணா புரம், கோவிந்தராஜ் நகர் , மாசிலாமணி புரம், ரவுண்ட்ரோடு, மாநகராட்சி 48 வார்டுகள், செட்டி நாயக்கன்பட்டி உட்பட
பல இடங் களில் வசூல் வேட்டை தீவிரமாகி யுள்ளது. சில ஆப்பரேட்ட ர்கள் மிரட்டும் தொனியில் பேசு கின்றனர்.
கலெக்டர், தாசில்தார் பெயரில் செட்டா பாக்ஸ் வசூலிப்ப வர்கள் கேபிள் டிவி தாசில்தார் மற்றும்
கலெக்ட ருக்கு நாங்கள் பணம் தர வேண்டும் எனக் கூறி வசூலிக் கின்றனர். இதனால் யாரிடம் புகார் தெரிவிப்பது என தயங்கு கின்றனர்.
கேபிள் 'டிவி' தாசில்தார் சரவணன் கூறிய தாவது: கலெக்டர் மற்றும் எனது பெயரை சொல்லி வசூலிப் பவர்கள் குறித்து பொது மக்கள் புகார் தரலாம்.
செட்டாப் பாக்ஸ் வெறும் ரூ.200 மட்டுமே. அதற்கும் கூடுதலாக கேட்போர் மீது வழக்கு தொடரப்படும்.
ஏற்கனவே 4 பேர் மீது வழக்கு தொடர்ந்து ள்ளோம். புகார்தார்கள் பெயர் ரகசிய மாக வைக்கப்படும் என்றார்.
Thanks for Your Comments