"பாக்சிங் டே" டெஸ்ட் மெல்போர்னில் கடந்த 26ம் தேதி தொடங்கியது. இன்று நிறை வடைந்த
இந்த டெஸ்டில் சதம் அடித்ததன் மூலம் டான் பிராட்மேன் சாதனையை ஸ்மித் சமன் செய்துள்ளார்.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் ஆஸ்திரேலியா தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை யில் இருந்தது.
இந்நிலை யில் "பாக்சிங் டே" டெஸ்ட் மெல்போர்னில் கடந்த 26ம் தேதி தொடங்கியது.
முதல் இன்னிங்சில் 76 ரன்கள் எடுத்த ஸ்மித், 2வது இன்னிங்சில் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.
2வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு ஆஸி. 263 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டத்தை முடிக்க இரு அணி கேப்டன்களும் முடிவு செய்தனர்.
ஸ்மித் 102 ரன்களுடன் களத்தில் நின்றார். இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் தொடர்ச்சி யாக
மெல்போர்ன் டெஸ்டில் நான்கு சதங்களை விளாசிய வீரர் டான் பிராட்மேனின் சாதனையை ஸ்டீவ் ஸ்மித் சமன் செய்தார்.
பிராட்மேன் 1928 முதல் 1931 வரை 112, 123, 152 மற்றும் 167 ரன்கள் அடித்தார்.
ஸ்டீவ் ஸ்மித் 192, 134 நாட்அவுட், 165 நாட்அவுட் மற்றும் 102 (நாட்அவுட்) ரன்கள் அடித்து பிராட்மேன் சாதனையை சமன் செய்துள்ளார்.
இதே போல கேப்டனாக டெஸ்ட் போட்டியில் அதிக சதம் அடித்தவர் களின் பட்டியலில்
15 சதங்களுடன் ஆலன் பார்டர் மற்றும் ஸ்டீவ் வாக் உடன் ஸ்மித் இணைந் துள்ளார்.
Thanks for Your Comments