ஆர்.கே. நகர் சட்டசபை தொகுதியின் உறுப்பினராக இருந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மரணம் அடைந்ததால், அந்த தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடை பெறுகிறது.
இதற்கான அறிவிக்கையை தேர்தல் கமிஷன் கடந்த மாதம் 27-ந்தேதி வெளியிட்டது. அன்றே வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ், சுயேச்சையாக டி.டி.வி. தினகரன், ஜெ.தீபா, நடிகர் விஷால் உள்ளிட்டோர் களம் இறங்கி உள்ளனர்.
தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம் வேட்பு மனுவை ஜெ. தீபா இன்று தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர் களிடம் பேசுகையில், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பண பலத்தையும், அதிகார பலத்தையும் பயன்படுத்து பவர்களே எனது பிரதான எதிரிகள்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிமுக தான் எனக்கு கடும் போட்டி. தினகரனை போட்டி யாக நினைக்க வில்லை என கூறினார்.
அவரிடம் நடை, உடை, பாவனை களை மாற்றியது ஏன்? என செய்தி யாளர்கள் எழுப்பிய கேள்விக்கு விளக்கம் அளித்தார். முன்னர் வந்த தீபாவிற் கும், இப்போதைய தீபாவிற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.
அவருடைய நடை, உடை, பாவனைகள் மாறி உள்ளது? என்ற கேள்விக்கு பதிலளித்த தீபா எனக்கு எந்த ‘டிரஸ்-கோடும்’ கிடையாது, யாரையும் காப்பி அடிப்பதும் கிடையாது என்றார்.
இன்னொரு ஜெயலலிதாவாக முயற்சி செய்கிறீர்களா? என்ற கேள்விக்கு, அதான் ஏற்கனவே நான் யாரையும் காப்பி அடிக்க வில்லை என்று கூறி விட்டேன், அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது.
எனக்கு மனதில் பிடித்த உடையை அணிவேன், அவ்வளவு தான் என்றார்.
Thanks for Your Comments