பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் நேரடி தமிழ்ப் படத்தின் நாயகி யாக நடிக்கிறார்.
'சாமிடா', 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்', 'சவுகார் பேட்டை', 'பொட்டு', 'கன்னியும் காளையும் செம காதல்' ஆகிய படங்களை இயக்கிவர் வி.சி. வடிவுடை யான்.
சரித்திரக் கதையை அடிப்படையாகக் கொண்ட இவர் இயக்கும் புதிய படத்தில் சன்னி லியோன் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கப் படவில்லை. நாசர், நவ்தீப் ஆகியோர் நடிக்கும் இப்பட த்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது.
படம் குறித்து நடிகை சன்னி லியோன் கூறுகையில், 'தென்னிந்திய கலாச் சாரங்களை மையப் படுத்தி எடுக்கப்படும் படத்தில் நாயகியாக நான் நடிக்கிறேன்.
கிளாமர் ரூட்டில் இனி பயணிப்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ளேன். சரித்திரப் படம் என்ப தால் கத்தி சண்டை, குதிரை யேற்றம் போன்ற சண்டைக் கலை களையும் கற்று வருகிறேன்.
படத்துக் காக 150 நாட்கள் கால்ஷீட் கொடுத்தி ருக்கிறேன். இந்தப் படத்து க்குப் பிறகு என்னுடைய அடையாளம் நிச்சயம் மாறும். ஆக்ஷன் காட்சி களில் நடிக்க எனக்கு எப்போதுமே பிடிக்கும்.
இந்த மாதிரி கதைகளுக்காக சில வருடங்களாகவே காத்திருக் கிறேன். வி.சி.வடிவுடையான் இந்தக் கதையை எனக்கு சொன்ன போதிலி ருந்தே நான் படத்து க்கு தயாராக ஆரம்பித்து விட்டேன்' என்றார்.
Thanks for Your Comments