திருப்பரங் குன்றத்தில் சாலையை அகலப் படுத்தாமல் நடுவே தடுப்புச் சுவர் அமைப்பதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குவதாக பொது மக்கள் குற்றம் சாட்டி யுள்ளனர்.
பசுமலையில் இருந்து மூலக்கரை வரையிலான ஜிஎஸ்டி சாலையின் நடுவே தடுப்புச் சுவர் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு நடுவே சுவர் அமைக்கப் படுகிறது. இந்த சாலையின் இருபுறமும் மணல் ஆங்காங்கே திட்டுகளாகவும் சில இடங்களில் பெயர்ந்து பள்ளங் களாகவும் உள்ளது.
இதனால் இவ்வழியே செல்லும் அனைத்து வாகனங்களும் கடும் நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன. இந்த நெரிசலில் ஆம்புலன்ஸ் கூட தப்புவதில்லை.
மேலும் இரவு நேரங்களில் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் தடுப்புச் சுவரில் மோதி அடிக்கடி விபத்தில் சிக்கும் அவல நிலையும் உள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்த சாலை யில் பத்துக்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன.
சுமார் 8 பேர் படுகாயத் துடன் மருத்துவ மனையில் அனுமதிக் கப்பட்டு ள்ளனர் என பொது மக்கள் குற்றம் சாட்டு கின்றனர்.
எனவே விபத்தை தடுக்கும் வகையில் சாலையின் இருபுறமும் அகலப் படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
Thanks for Your Comments