சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன், 40,707 வாக்குகள் வித்தியா சத்தில் ஆளும் அதிமுகவின் வேட்பாளர் மதுசூதனனை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடந்து முடிந்தது. மொத்த முள்ள 2 லட்சத்து 28,234 வாக்காளர்களில் 33,994 ஆண்கள், 92,867 பெண்கள், இதர பாலினத்தவர் 24 பேர் என 1 லட்சத்து 76,885 பேர் வாக்க ளித்தனர்.
இதன்படி, இறுதியாக 77.5 சதவீதம் வாக்காளர்கள் தங்கள் வாக்கு களை பதிவு செய்தனர். 19 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப் பட்டன.
வாக்கு எண்ணிக்கை முடிவில், சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று இடைத் தேர்தலில் வாகை சூடியு ள்ளார். 50.32% வாக்கு களை அவர் பெற்றிருக் கிறார்.
அவரைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 48,306 வாக்குகள் பெற்றுள்ளார். இவரது வாக்கு சதவீதம் 27.31%. திமுக வாக்கு சதவீதம் 13.94% ஆகும்.
கடந்த 2004-ம் ஆண்டுக்குப் பின்னர் தமிழக த்தில் இடைத் தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வியைத் தழுவி யிருப்பது இதுவே முதல் முறை யாகும்.
அதே போல் 2001-ல் ராதாபுரம் தொகுதி யில் அப்பாவு சுயேட்சை யாக வெற்றி பெற்ற பின்னர் டிடிவி தினகரனே சுயேட்சை யாக வெற்றி பெற்றி ருக்கிறார்.
ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை விஞ்சிய டிடிவி:
கடந்த 2016-ம் ஆண்டு ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடந்த போது அதிமுக வேட்பாளாராக களம் கண்ட ஜெயலலிதா அவரை எதிர்த்துப் போட்டி யிட்ட திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழனை விட 39,544 வாக்குகள் அதிகமாகப் பெற்றார்.
தற்போதைய இடைத் தேர்தலில் சுயேட்சை யாக போட்டி யிட்ட டிடிவி தினகரன் அதிமுக வேட்பாளரை விட 40,707 வாக்குகள் அதிகமாக பெற்று ள்ளார்.
ஒப்பிட்டுப் பார்த்தால் இது ஜெயலலிதா - சிம்லா முத்துச்சோழன் இடை யேயான வாக்கு வித்தியா சத்தைவிட அதிகமான தாகும். 1,162 வாக்குகள் டிடிவி அதிகமாகப் பெற்று ள்ளார்.
டெபாசிட் இழந்த திமுக:
திமுக வேட்பாளர் மருது கணேஷ் 24,581 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தார். மொத்தம் பதிவான வாக்கு களில் 6% பெறும் கட்சியே டெபாசிட் பெற முடியும்.
அதாவது 29,480 வாக்குகள் பெற்றால் மட்டுமே திமுக டெபாசிட் பெற முடியும் என்பது நிலைமை. ஆனால், மருதுகணேஷ் 24,581 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ள நிலையில் திமுக டெபாசிட் இழந் துள்ளது.
நாம் தமிழர், பாஜக கட்சிகளும் டெபாசிட் இழந் துள்ளன. நோட்டாவை விட குறை வான வாக்கு களையே பாஜக பெற்றுள்ளது என்பது கவனிக்கத் தக்கது.
Thanks for Your Comments