வைகை தென்கரை சாலை குண்டும் குழியுமாக காட்சி தருவதால் வாகனங்கள் சிக்கி திணறிச் செல்கின்றன.
மதுரை மாநகரு க்குள் வைகை கரையில் சாலை அமைக்கப் பட்டு, போக்கு வரத்திற்கு பயன்பட்டு வருகிறது. யானைக் கல்லில் துவங்கி வைகை தென்கரை சாலை குருவிக் காரன் சாலை வரை நீள்கிறது.
இஸ்மாயில்புரம் தெருக்கள் இந்த சாலையில் இணை கின்றன. இந்த சாலை ஆங்காங்கே குண்டும் குழியுமாக காட்சிய ளிக்கிறது. வாகனங்கள் செல்ல முடியாமல் திணறும் நிலை ஏற்படுகிறது.
குழியில் சிக்கி கொஞ்சம் நிலை தடுமாறினாலும், வைகை ஆற்றுக்குள் விழுந்து விடும் அபாய நிலையில் உள்ளது. இது தவிர அதிக இடங்களில் வேகத் தடைகள் அமைக்கப் பட்டுள்ளன.
இதுவும் சீறாக வாகனங்கள் செல்ல பெரும் தடையாக இருக்கிறது. சில இடங்களில் குடிநீருக்காக பள்ளம் தோண்டி அப்படியே விட்டுள்ளனர்.
பாதாள சாக்கடைக் காகவும் குழி தோண்டி அதனை சரிவர மூடாமல் மாநகராட்சி ஊழியர்கள் சென்று விட்டனர்.
மொத்தத்தில் படுமோசமான நிலையில் வைகை தென்கரை சாலையின் நிலை இருப்பதாக அப்பகுதி வழியாக அடிக்கடி சென்று வரும் வாகன ஓட்டிகள் புலம்புகின்றனர்.
இதே போல் மதுரை மாட்டுத் தாவணியிலிருந்து சர்வேயர் காலனியை இணைக்கும் 120 அடி சாலை செல்கிறது. இந்த ரோடு படுமோச மாக காட்சி யளிக்கிறது.
120 அடி கொண்ட இந்த ரோட்டில் நூற்றுக் கணக்கான பள்ளங்கள் உள்ளன. இதனை மூடி தார்ச்சாலை அமைப்பதை விட்டு விட்டு, செம்மண் பரப்பி பெயரள வில் சீரமைப்பு பணியை செய்திருக் கின்றனர்.
ஒரு மழை பெய்தால் செம்மண் காலியாகி விடும். எனவே புதிய தார் ரோட்டை விரைவில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Thanks for Your Comments