ஈரானில் இனி ஆடை கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் கைது செய்யப்பட மாட்டார்கள் என்று அந்நாடு அறிவித்துள்ளது.
இது குறித்து தெஹ்ரான் போலீஸார் தரப்பில், இஸ்லாம் ஆடை விதிமுறை களை மீறுபவர்கள் இனி கைது செய்யப்பட மாட்டர்கள். நீதிமன்ற வழங்குகள் அவர்கள் மீது பதியப்படாது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
கடந்த 40 ஆண்டு களாக ஈரானில் பெண்கள் தங்கள் முடி உட்பட முற்றிலும் மறைக்கப் பட்ட தளர்வான ஆடையை அணிய கட்டாயப் படுத்தப் பட்டனர்.
இதனை எதிர்த்து பெண்கள் சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்களும் மேல் ஆடை இல்லாமல் பொது இடங்களில் செல்வ தற்குத் தடை விதிக்கப் பட்டது
இந்த நிலையில், ஈரான் அதிபராக மீண்டும் ஹசன் ரஹ்கானி இந்த ஆண்டின் தொடக் கத்தில் தேர்தெடுக் கப்பட்டப் பிறகு
ஈரானில் சீர்திருத்தம் எண்ணம் கொண்ட இளம் வயதினர் அந்நாட்டி லுள்ள ஆடை விதிமுறை களை பற்றியும், அதனை மீறுபவர் களுக்கு வழங்கப் படும் கடுமை யான தண்டனைகள் குறித்து முறை யிட்டனர்.
அதன் விளைவாக தான் இந்த அறிவிப்பை ஈரான் அரசு அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
Thanks for Your Comments