விஷால் வேட்புமனு ஏற்பு - பேட்டி !

0
ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் போட்டி யிடுவதற் காக நடிகர் விஷால் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். 
விஷால் வேட்புமனு ஏற்பு - பேட்டி !
தேர்தல் ஆணைய விதிகளின் படி ஒரு தொகுதி யில் வேட் பாளராக போட்டி யிடும் நபரை அந்த தொகுதி வாக்காளர் பட்டிய லில் இடம் பெற்றுள்ள பத்து பேர் முன்மொழிய வேண்டும்.

ஆனால், விஷால் தாக்கல் செய்த வேட்பு மனுவை முன்மொழிந் ததாக காணப்படும் பத்து பெயர் களில் விஷாலை முன் மொழியாத இரு பெயர்கள் இணைக்கப் பட்டுள்ள தாகவும், 

இதன் காரணமாக அவரது வேட்பு மனு நிராகரி க்கப்பட்ட தாகவும் முதலில் தகவல் வெளியானது.

இதை தொடர்ந்து, ஆர்.கே.நகர் தேர்தல் அலுவலக த்துக்கு மாலை ஐந்தரை மணிய ளவில் விரைந்து வந்த நடிகர் விஷால் 

தன்னை ஆதரித்து முன்மொழிந் தவர்கள் மிரட்டப் பட்டதற் கான வீடியோ ஆதாரம் தன்னிடம் உள்ள தாகவும், 
எனது வேட்பு மனு நிராகரிக்கப் பட்டதில் நியாய மில்லை என்றும் தேர்தல் அதிகாரி வேலுச் சாமியிடம் முறையீட்டார். 

இதில் திடீர் திருப்ப மாக நீண்ட நேர இழுபறிக்கு பின், விஷாலின் வேட்பு மனு ஏற்கப் படுவதாக அறிவிக்கப் பட்டது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்த நடிகர் விஷால், தேர்தல் ஆணையம் நேர்மை யாக நடந்து கொண்ட தற்கு நன்றி தெரிவிப்ப தாக கூறினார். 

மேலும் அவர் கூறுகை யில், “ நாளை முதல் ஆர்.கே. நகரில் மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிக்க உள்ளேன். 

நியாய மாக என்ன நடைபெற வேண்டுமோ அதை தேர்தல் ஆணையம் செய்து கொடுத் துள்ளது. 
மனு தாக்கல் செய்வதில் இருந்து மனு ஏற்கப்படும் வரை அனைத்துமே எனக்கு போராட்டம் தான். 

நல்லது நடக்க வேண்டும் என்றால் தடைகள் இருக்கத் தான் செய்யும். முன் மொழிந்த 2 பேரின் கையெழுத்து அவர்களது இல்லை என்ற புகாரில் உண்மை இல்லை. 

வேட்பு மனு ஏற்கப் பட்டதன் மூலம் நீதி, நேர்மை, நியாய த்திற்கு வெற்றி கிடைத் துள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings