'இரும்புத்திரை' கதையில் வில்லனாக நடிக்க விஷால் ஆசைப் பட்டதாக இயக்குநர் மித்ரன் தெரிவித்தி ருக்கிறார். விஷால் நாயகனாக நடித்து தயாரித்து வரும் படம் 'இரும்புத்திரை'.
புதுமுக இயக்குநர் மித்ரன் இயக்கி வரும் இப்படத்தில் சமந்தா, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்து வரு கிறார்கள்.
ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எல்.ரூபன் எடிட்டராக பணிபுரிந்து வருகிறார். யுவன் இசை யமைத்து வரும் இப்படம் ஜனவரி 26-ம் தேதி வெளியாகவு ள்ளது.
'இரும்புத்திரை' குறித்து இயக்குநர் மித்ரன் கூறியிருப் பதாவது:
'இரும்புத்திரை' கதையை முதலில் விஷாலிடம் சொல்லும் போது, கதை பிடித்தால் வேறு யாரை யாவது வைத்து தயாரிக்க லாம் என்ற
எண்ண த்தில் தான் கேட்டார். கதையைக் கூறி முடித்தவுடன் நானே நடிக்கிறேன். ஆனால் வில்லனாக நடிக்கிறேன் என்றார்.
பிறகு அவரிடம் பேசி நாயகனாக நடியுங்கள் என்றேன். ஏனென்றால் இப்படத்தில் வில்லன் கதா பாத்திரத்தை மிகவும் வலிமை யாக உருவாக் கியிருக் கிறேன்.
விஷால் போன்ற பெரிய நடிகர் என்பதால் அவருக்காக சில மாற்ற ங்கள் செய்தேன். சாதாரணமாக இருந்த நாயகன் கதா பாத்திரத்தை ராணுவ வீரராக மாற்றினேன்.
சமூக வலை தளத்தில் நமக்கு தெரியாமல் நடக்கும் நிறைய மர்மங்களைப் பற்றியும் அது ஏற்படுத்தும் விளைவு பற்றியும் இப்படத்தில் தெரிவித்தி ருக்கிறேன்.
இன்னும் நாம் அறியாத பல விஷயங்களை பற்றிப் பேசும் படமாக இருக்கும். படத்தில் சமந்தாவுக்கு முக்கியமான கதாபாத்திரம். அதைப் பற்றி இப்போது கூற முடியாது.
நிச்சயம் வழக்கம் போல் வரும் கதாநாய கியின் காதா பாத்திரம் போல் இருக்காது. நாயகனாக விஷால் நடிப்பது உறுதி யானவுடன், மற்றவர் களைப் புதிதாக தேர்ந்தெடுக் கலாம் என்று முடிவெடுத் திருந்தேன்.
ஆனால், படத்தை பெரிதாகவே பண்ணலாம் என்று விஷால் கூறினார். அவர் எனக்கு அளித்த ஊக்கம் மற்றும் சுதந்திரம் மிகப் பெரியது. எனக்கு விஷால் சாரிடம் பிடித்தது அவருடைய பன்முகத் திறமை.
ஒரே நேரத்தில் இங்கு படத்தில் நடித்துக் கொண்டி ருப்பார் பின்பு நடிகர் சங்க வேலை, தயாரிப்பாளர் சங்க பஞ்சாயத்து, செக் கையெழு த்திடுதல் என
ஒரு மனிதனால் இத்தனை வேலைகளைச் செய்ய முடியுமா என்று வியக்க வைப்பார். இவ்வாறு மித்ரன் தெரிவித் திருக்கிறார்.
Thanks for Your Comments