விஷால் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வெண்டும்... இயக்குநர் சேரன் !

0
தயாரிப்பாளர் நலன் கருதி விஷால் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் நிற்பதே நல்லது. 
விஷால் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வெண்டும்... இயக்குநர் சேரன் !
இதை கருத்தில் கொள்ளாமல் விஷால் வேட்புமனு தாக்கல் செய்தால் தயாரிப் பாளர் சங்கத்தில் உள்ளி ருப்புப் போராட்டம் நடத்துவேன் என்று இயக்குநர் சேரன் ட்விட்டரில் தெரிவித் துள்ளார்.

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார். அதன் படி டிசம்பர் 4-ம் தேதி (நாளை) வேட்புமனு தாக்கல் செய்கிறார். 

வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பாக விஷால் ராமாவரம் எம்.ஜி.ஆர் இல்லத்திலும், மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்திலும் மரியாதை செய்ய உள்ளார்.

இந்நிலை யில் இது குறித்து சேரன் தன் ட்விட்டர் தளத்தில், ''முதல் கள மிறங்கும் போதே  பொய் முகத்தோடு நோக்க மேயின்றி யாரோட தூண்டு தலாலோ நிற்பதி லிருந்து வியாபாரக் குதிரை ஆகி விட்டார் விஷால்.
நடிகர் சங்கத்தில் ஜெயித்த வுடன் முதலில் திமுக தலைவர் கருணாநிதி யைப் பார்த்து ஆசீர்வாதம் வாங்கிய விஷால் நாளை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரை வணங்கி மனுதாக்கல். ஏன்?

விஷாலின் இந்த முடிவால் நடுத்தெருவில் நிற்கப் போவது தயாரிப் பாளர்கள். இனிவரும் எந்த அரசிட மிருந்தும் எதுவும் கிடைக்கப் போவ தில்லை. 

மொத்த மாக தலையில் துண்டு. தயாரிப்பாளர் நலன் கருதி விஷால் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் நிற்பதே நல்லது.  இல்லை யெனில் நிறைய "அசோக் குமார்களை" சங்கம் சந்திக்கும்.
இதை கருத்தில் எடுக்காமல் நாளை அவர் மனு தாக்கல் செய்தால் நாளை மறுநாள் முதல் நான் சங்க த்தில் உள்ளி ருப்புப் போராட்டம் நடத்துவேன். 

தலைவர் பதவியை விஷால் ராஜினாமா செய்யும்வரை'' என்று சேரன் தெரிவி த்துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings