தெலுங்கு, தமிழ் என 50 படங்க ளுக்கு மேல் நடித்தவர் சதா. ஷங்கர் இயக்கிய அந்நியன் படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்து நம்பர் ஒன் இடத்தையும் பிடித்தார்.
தற்போது அவர் டார்ச் லைட் என்ற படத்தில் பாலியல் தொழிலாளி யாக நடிக்கிறார். விஜய் நடிப்பில் தமிழன் படத்தை இயக்கிய அப்துல் மஜீத் இயக்குகிறார்,
புதுமுகம் உதயா, ரித்விகா, ஏ.வெங்கடேஷ், சுஜாதா, உள்பட பலர் நடிக்கி றார்கள்.
இது பற்றி இயக்குனர் அப்துல் மஜீத் கூறியதாவது:
பாலியல் தொழிலுக்கு எந்த பெண்ணும் விரும்பி வருவ தில்லை. வறுமை யாலும், துரோகத் தாலும், சந்தர்ப்ப சூழ்நிலை யாலும் அதற்குள் தள்ளப்படு கிறார்கள்.
அந்த சூழ்நிலை களை சமாளித்து எப்படி பாலியல் தொழிலுக்கு செல்லாமல் தப்பிக்க லாம் என்று பெண் களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்தப் படம் தயாராகி வருகிறது.
நிறைய நடிகை களிடம் இந்த கதையை கூறியும் அவர்கள் நடிக்க மறுத்து விட்டனர். இமேஜ் போய்விடும் என்றனர்.
கடைசியாக சதாவிடம் கதை சொன்ன போது இது போன்ற படங்கள் சமூக த்துக்கு அவசியம் தேவை என்ற கூறி நடிக்க ஒப்புக் கொண்டார் என்றார் அப்துல் மஜீத்.
Thanks for Your Comments