ஓகி புயல் குறித்து வானிலை மையம் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கா தது குறித்து விசாரிக்க மத்திய அரசு உத்தர விட்டுள்ளது.
தென்மேற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி ஓகி புயலாக மாறி கடந்த 30-ம் தேதி குமரி மாவட்ட த்தை புரட்டிப் போட்டது.
குமரி மாவட்டம் மற்றும் கேரள பகுதிகளில் கடலுக்கு சென்ற மீனவர்கள் பலர் மாயமா கினர். அவர்களது கதி என்ன வென்று தெரியாத நிலையில் மீனவ கிராமங்கள் சோகத்தில் முழ்கி யுள்ளன.
இதனிடையே புயல் குறித்து எந்த ஒரு முன்னெச்ச ரிக்கையும் இல்லாத தால் கடலுக்கு சென்ற மீனவர்கள் ராட்சத அலை களில் சிக்கிய தாக புகார்கள் எழுந்து ள்ளன.
கடந்த 29-ம் தேதி நள்ளிறவு முதல் அடுத்த நாள் பிற்பகல் வரை கன்னிய குமரி மாவட்ட த்தை ஓகி புயல் தாக்கி யுள்ளது.
ஆனால் கடந்த 30-ம் தேதி 12 மணி யளவில் ஓகி புயல் உருவான தாக இந்திய வானிலை மையம் அதிகாரப் பூர்வ அறிவிப்பை வெளியுட் டுள்ளது.
சென்னை வானிலை மையமும் 30-ம் தேதி 12.45 மணிக்கு ஊடக சந்திப்பின் போது புயல் அறிவிப்பை அறிவித்தது.
புயல் உருவான நிலை யில் அது குறித்து முன் கூட்டியே தெரிவிக் காமல் தாமதமாக அறிவித்தது ஏன் என இந்திய வானிலை மையம்,
சென்னை வானிலை ஆய்வு மையம், ரேடார் மையம் ஆகிய வற்றில் பணியில் இருந்தவர் களிடம் விசாரணை நடத்த மத்திய அரசு உத்தர விட்டுள்ளது.
Thanks for Your Comments