காதலன் தன்னை ஏமாற்றி உல்லாசம் அனுபவிப் பதற்காக விடுதி ஒன்றுக்கு அழைத்து செல்வ தற்கு மறுப்புத் தெரிவித்த யுவதி ஒருவர்,
பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளி லிருந்து பாய்ந்து படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ள தாக கேகாலை பொலிஸார் தெரிவிக் கின்றனர்.
சம்பவத் தில் 21 வயதான யுவதியே காயமடைந் துள்ளதாக வும், அவரது காதலனான வெல்லவாய பிரதேசத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவரை கைது செய்துள்ள தாகவும் பொலிஸார் தெரிவிக் கின்றனர்.
இவ்விருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ள நிலையில், நேற்று முன்தினம் பிற்பகல் இருவரும் கேகாலை நகரில் சந்தித் துள்ளனர்.
அதன் போது, தனது காதலியிடம் குறித்த இராணுவ வீரர், முதலில் அமைதியான இடமொன்று க்கு சென்று பேசிக் கொண்டி ருப்போம் என தெரிவித்துள்ளார்.
நகரிலுள்ள பூங்கா ஒன்றுக்கு காதலன் தன்னை அழைத்துச் செல்வார் என்ற எண்ணத் தில் யுவதியும் சம்மதம் தெரிவித் துள்ளார்.
அதன் பின்னர் அவர் குறித்த யுவதியை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு, பூங்காவை நோக்கி செல்லாமல் வேறு திசையாக பயணித் துள்ளார்.
பூங்காவுக்கு செல்லாமல் எங்கு செல்கிறீர் என யுவதி வினவவே, ‘அங்கு செல்வதால் எவ்வித பயனும் இல்லை நாம் விடுதி ஒன்றுக்கு செல்வோம் என தெரிவித் துள்ளார்.
அதன் போது தனது காதலனின் சூட்சுமத்தை அறிந்து கொண்ட யுவதி, விடுதிக்கு செல்வதற்கு மறுப்பு தெரிவித் துள்ளார்.
எனினும், யுவதியின் பேச்சைக் கேட்காமல், விடாப் பிடியாக மோட்டார் சைக்கிளை நிறுத்தாது இராணுவ வீரர் பயணத்தை தொடர்ந் துள்ளார்.
காதலனிட மிருந்து தப்பிப்பதற் காக யுவதி கூச்சலிட்ட துடன், காதலனை கெஞ்சிக் கேட்டு அங்கு செல்ல வேண்டாம் எனப் போராடி தன்னால் இயலாத கட்டத்தில்,
அரணாயக்க – கல்பொக்க பிரதேசத்தில், பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளி லிருந்து கீழே பாய்ந்துள்ளார் என்றும் விசாரணை களில் தெரியவந்துள்ளன.
அதனை யடுத்து, அவரது காதலன் அயலில் இருந்தவர் களின் உதவியுடன், படுகாய மடைந்த யுவதியை கேகாலை பொது வைத்திய சாலைக்கு அழைத்துச் சென்று அனுமதித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப் பாடொன்றுக்கமைய சந்தேக நபரான இராணுவ வீரரை கைது செய்த துடன் அவரது மோட்டார் சைக்கிளை யும் கேகாலை பொலிஸார் கைப்பற்றி யுள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை களை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Thanks for Your Comments