ஆட்டோ டிரைவர் ஓட்டிச் சென்ற அரசுப் பேருந்து, மின் கம்பத்தின் மீது மோதியது. மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த நிலையில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.
அரசு போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்ட த்தில் ஈடு பட்டிருப்பதால், தற்காலிக ஊழியர்களைக் கொண்டு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
மதுரை மாவட்டம் திருப்பரங் குன்றத்தைச் சேர்ந்த டேனியல் என்பவரும் அரசுப் பேருந்து ஓட்ட விண்ணப் பித்திருந்தார். இவர், அந்தப் பகுதியில் ஆட்டோ ஓட்டிக் கொண்டி ருந்தவர்.
பணிக்குத் தேர்வு செய்ய பட்ட டேனியல், நேற்று மதுரை பெரியார் பேருந்து நிலையத் திலிருந்து திருநகரு க்கு பேருந்தை ஓட்டிச் சென்றார்.
திருநகர் அருகே ஒரு திருப்பத்தில் பேருந்து திரும்பிய போது, சாலையில் இருந்த மின் கம்பத்தில் மோதியது. மோதிய வேகத்தில் மின்கம்பம் வளைந்தது.
நல்ல வேளை யாக வயர்கள் அறுந்து பேருந்து மீது விழவில்லை. இதனால், பயணிகள் அதிருஷ்ட வசமாக உயிர் தப்பியதோடு, அலறி யடித்து பேருந்தில் இருந்து இறங்கி ஓடினர்.
இதற்கிடையே, சம்பவ இடத்துக்கு இரு துறையைச் சேர்ந்த அதிகாரி களும் வந்தனர். மின் கம்பத்தைச் சரிசெய்ய இழப்பீடு தர வேண்டுமென
மின் வாரிய த்தினர் அரசு போக்குவரத்து அதிகாரி களிடம் வாக்கு வாதம் செய்த தால், தகராறு உரு வாகும் சூழலைப் பார்த்த டேனியல் அங்கிருந்து ஓடி விட்டார்.
தமிழக அரசு, அப்பாவி மக்களின் உயிருடன் விளையாடி வருவதாக போக்கு வரத்து ஊழியர்கள் குற்றம் சாட்டி யுள்ளனர்.
Thanks for Your Comments