அ.தி.மு.க சசிகலா குடும்பத்தின் பிடியில் இருந்ததா?

0
அ.தி.மு.க-வைத் தோற்றுவித்த எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாள், தமிழகம் முழுவதும் கொண்டாடப் படுகிறது.
அ.தி.மு.க சசிகலா குடும்பத்தின் பிடியில் இருந்ததா?
ஆனால், முன்னெப் போதும் இல்லாத ஒரு பெருமை அவரின் இந்தப் பிறந்த நாளுக்கு உண்டு. மாவட்டந் தோறும் தமிழக அரசின் சார்பில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடப் பட்டது. 

எடப்பாடி முதல்வராக இருந்து எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் ஓ.பி.எஸ்ஸை விமர்சித்து வந்தார். 

ஜெயலலிதா வைப் பின்பற்றி குட்டிக்கதை யெல்லாம் சொல்லி வந்த நிலையில் தான், மத்திய அரசின் மத்தியஸ் தத்துடன் எடப்பாடி - ஓ.பி.எஸ். அணிகள் இணைப்பு அரங்கேறியது. 

தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினர் ஓரங் கட்டப்பட்ட பின்னர் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், 

துணை முதல்வராக ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி யுடன் ஒரே மேடையில் பங்கேற்றது தான் 

வேடிக்கை யான விந்தை. தமிழகத்தில் கிராமங்கள் தோறும் அடிமட்ட அளவில், குறைந்த வருவாய் பிரிவினரிடை யேயும் எம்.ஜி.ஆர், 

ஜெயலலிதா என்ற இருபெரும் தலைவர் களின் பிம்பங்கள், கோலோச்சிய நிலைமாறி, தற்போது ஆட்சி அதிகாரத் தில் இருக்கும் ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் இருவரையும் வேறு வழியில்லாமல் ஆதரிக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. 

எம்.ஜி.ஆர் பக்தர் களுக்கு இதைவிட சோதனைக் காலம் வேறிருக்க முடியாது.

எடப்பாடி யும், ஓ.பி.எஸ்ஸூம் ஆட்சி அதிகாரத்தில் உள்ள காரணத் தினால், அரசின் செலவில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவைக் கொண்டாடித் தீர்த்தனர். 
ஆனால், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா மிகப் பிரமாண்ட மானதாக இருக்கும் என்று எதிர் பார்க்கப் பட்ட சூழலில், 

அது போன்ற எந்தவொரு சுவடும் இல்லாமல், மாநிலம் முழுவதும் பல்வேறு குழுக்களாக எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாளை கொண் டாடினர்.

அ.தி.மு.க- வினர் பல அணிகளாகப் பிரிந்து காணப்படும் நிலை, எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாளில் கண்கூடாக வெளிப்பட்டது. 

அ.தி.மு.க-வில் தற்போது என்ன நடக்கிறது என்பதை சாமான்ய தொண்ட ர்களால்கூட புரிந்து கொள்ள முடியாத நிலைதான் நீடிக்கிறது.

தினகரன் - அ.தி.மு.க.இது ஒரு புறமிருக்க, கோத்தகிரி யில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு செய்தியாள ர்களுக்குப் பேட்டிய ளித்தார் டி.டி.வி. தினகரன். 

அப்போது, தமிழகத்தில் பொதுத் தேர்தல் நடைபெற்றால் நாங்கள் வெற்றி பெற்று ஆட்சிய மைப்போம். 

அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் ஊழல் செய்து சேர்த்த சொத்துகள் பறிமுதல் செய்யப்படும். 

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப் பட்டதை எதிர்த்து தொடரப் பட்டுள்ள வழக்கில், விரைவில் தீர்ப்பு வெளியாகி, தமிழகத்தில் தற்போதுள்ள ஆட்சி கவிழும். 
அப்போது, 'ஸ்லீப்பர் செல்கள்' யார்-யார் என்பது தெரியவரும். தேர்தல் ஆணையத் தின் முடிவு தற்காலிக மானது தான். 

அதை எதிர்த்து நாங்கள் வழக்குத் தொடர்ந் துள்ளோம். எடப்பாடியும், ஓ.பி.எஸ் ஸூம் பதவியில் ஒட்டிக் கொண்டிருப் பதற்காக, மத்திய பி.ஜே.பி-யுடன் இணக்கமாக உள்ளனர். 

தற்போது அ.தி.மு.க-வில் நிலவும் குழப்பங் களுக்கு பி.ஜே.பி-யே காரணம்" என்றார். ஆட்சி அதிகார த்தில் உள்ள எடப்பாடி தரப்பினரிடம் கட்சியின் பெயரும், கொடியும் உள்ளது. 

ஆர்.கே. நகர் தேர்தலுக்கு முன் தேர்தல் ஆணையம், 'அ.தி.மு.க. பெயர், சின்னம் மற்றும் கொடியை எடப்பாடி அணியினர் பயன் படுத்திக் கொள்ளலாம்' என்று தெரிவித்தனர். 

ஆனாலும், தினகரனை, 'கழக துணைப் பொதுச் செயலாளர்' என்றும், சசிகலாவை 'தியாகத் தலைவி பொதுச் செயலாளர்' என்றும் அவர்களின் குடும்பத் தொலைக் காட்சியில் வெளியாகும் செய்தியில் தொடர்ந்து குறிப்பிடு கிறார்கள். 
அ.தி.மு.க. இல்லாமல் எந்தக் கட்சிக்குப் பொதுச் செயலாளர், துணைப் பொது ச்செயலாளர் என்பது அவர்களு க்கே வெளிச்சம். 

இந்நிலையில், "அ.தி.மு.க-வை மீட்க, புதிய கட்சி தொடங்குவது பற்றி பரிசீலிக் கப்படும்" என்கிறார் தினகரன்.

தினகரனால் தற்போது ஊழல் புகார் வாசிக்கப் படும் அமைச்சர்கள் மற்றும் பெரும் பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் 

எல்லோருமே சசிகலா குடும்பத்தினருக்கு 'கப்பம்' கட்டி சீட் வாங்கியவர்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? 

மேலும், ஜெயலலிதா தலைமை யில் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த காலங்களில் சசிகலா, தினகரன் 

மற்றும் அவர்களின் குடும்ப உறவுகள் சேர்த்த சொத்துக ளின் மதிப்பு எவ்வளவு? ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை, சசிகலா குடும்பத்திற்கு அடிமையாக 

இருந்தவர்கள் தான் இப்போதுள்ள பெரும்பாலான அமைச்சர்கள். சசிகலா குடும்பத்தி னரால் அமைச்சர் களானவர் களைத்தான் தற்போது ஊழல் வாதிகள் என்று தினகரன் விமர்சிக் கிறார்.

"நான் ஒன்றும் காந்தி பேரன் அல்ல" என்று செய்தியாளர் களிடம் தெரிவித்த தினகரன் தான், தற்போது அமைச்சர் களின் ஊழல் பற்றிப் பேசுகிறார். 
2017 பிப்ரவரி மாதம் ஓ.பி.எஸ். தியானம் இருந்ததும், கூவத்தூர் விடுதியில் அமைச்சர் கள் எம்.எல்.ஏ - க்களைத் தங்க வைத்து 

அவர்களு க்கு 'வேண்டியதை' கவனித்தது வரை நடந்தது என்ன? என்பதை தினகரன் வெளிப் படையாகச் சொல்வாரா?
அ.தி.மு.க சசிகலா குடும்பத்தின் பிடியில் இருந்ததா?
எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியில் அமர வைக்கும் வரை, அவரின் அமைச்சரவை யில் இடம் பெற்றுள்ள வர்கள் ஊழல் செய்தது தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்தின ருக்குத் தெரியவர வில்லையா?

நடராஜன் சசிகலாவின் கணவர் நடராஜனோ, ஒரு படி மேலே போய், "எடப்பாடியும், பன்னீர் செல்வமும் எந்தெந்த நாடுகளில் சொத்துகள் வாங்கிக் குவித்து ள்ளனர் என்ற விவரத்தை என்னால் தெரிவிக்க முடியும். 

மேலும் ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியிடப் பட்டதில் தவறில்லை. அது ஒரு ஆவணப்படம்" என்கிறார். 

அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை எம்.ஜி.ஆருக்குப் பிறகு கட்டிக் காத்த ஜெயலலிதா என்ற பிம்பம் மறையும் வரை, 

அவர் மீது மரியாதை வைத்திருந் ததாகவும், தெய்வமாக மதித்த தாலேயே அப்போலோ வில் சிகிச்சையை வெளியிட வில்லை என்றும் சசிகலா குடும்ப த்தினர் தெரிவித்தனர்.

அப்படி யானால், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக் காக, வாக்குப் பதிவுக்கு முந்தைய நாள், ஜெயலலிதா சிகிச்சை பெறுவது போன்ற வீடியோவை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? 
ஜெயலலிதா வின் போயஸ் கார்டன் இல்லம் கோயில் என்றால், அதில் வாழ்ந்த ஜெயலலிதா வின் வீடியோவை எப்படி வெளியிட முடிந்தது? 

ஒட்டு மொத்த தமிழகமே ஜெயலலிதா வுக்கு என்ன நேர்ந்தது என்ற கலக்க த்தில், சோகத்தில் 75 நாள்கள் தவித்த போதெல்லாம், 

ஒரு புகைப் படத்தைக் கூட வெளி யிடாமல் இருந்த சசிகலா குடும்பத் தினர், ஆர்.கே. நகர் தேர்தலின் போது எப்படி வெளி யிட்டனர்? என்பன போன்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுகின்றன.

அ.தி.மு.க என்ற மக்கள் இயக்கத்தை, ஜெயலலிதா வை முன்னிறுத்தி சசிகலா குடும்பத் தினர் தங்களின் பிடியில் வைத்திருந் ததை நடராஜனும், 

தினகரனும் தற்போது ஒப்புக் கொள்ளும் விதமாகவே அவர்களின் பேட்டிகள் அமைந் துள்ளன.

மொத்தத்தில் தமிழ்நாட்டு மக்களையும், அ.தி.மு.க. தொண்டர் களையும், ஆளும் எடப்பாடி தரப்பினரும்,
அ.தி.மு.க சசிகலா குடும்பத்தின் பிடியில் இருந்ததா?
தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்தி னரும் பைத்தியக் காரர்களாக்கி வருகிறார்கள் என்பது தெளிவா கிறது. 

இது போன்ற நிகழ்வுகளுக்கு எல்லாம் தீர்வாக எதிர்வரும் காலத்தில் பொதுத் தேர்தலின் போதாவது உண்மை யான ஜனநாயகம் மலர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings