காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என மூன்று கதாநாயகிகள் இருந்தாலும்... `மெர்சல்' படத்தில் ஸ்கோர் பண்ணியது நித்யா மேனன் தான்.
`நடிப்பில் பிச்சு உதறுகிறார்' என்கிற வார்த்தை களுக்கு நூறு சதவிகிதம் பொருத்த மானவர் இவர். எந்த கேரக்டராக இருந்தாலும் ஊதித்தள்ளி விடுகிற அளவுக்கு நடிப்பில் ராட்சசி. தமிழ், மலையாளம், தெலுங்கு என
ரவுண்டு கட்டிய இவர், அடுத்து பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுக்க விருக்கிறார். நித்யா மேனனிடம் ஒரு மழைப் பேச்சு...
நித்யா மேனன் டைரக்ட் செய்யப் போறதா ஒரு செய்தி... உண்மையா?
‘இருக்க லாம். ஆனா, இப்போ உறுதியா சொல்ற மாதிரி எந்த பிளானும் இல்லை. எது வேணா நடக்கலாம். திறமை யிருந்தா அதை வெச்சு என்ன வேணா பண்ணலாம்!’’
சினிமா உங்களுக்கு பிசினஸோ, கரியரோ இல்லைங்கிறீங்க... அப்ப எதிர் காலத்துல என்ன திட்டம் வெச்சிருக்கீங்க?
‘`நான் எப்பவும் எதையும் பிளான் பண்ற தில்லை. என் லைஃப்ல எப்பவும் கடவுள் தான் நான் என்ன பண்ணணும் கிறதை முடிவு செய்திருக்கார்.
அதனால ரொம்ப யோசிக்க மாட்டேன். பார்க்கலாம்... வாழ்க்கை யில எது வரணுமோ, அது வரும்.’’
‘ஓகே கண்மணி’ யில `லிவ் இன் ரிலேஷன்ஷிப்’ல இருக்கிற ஹீரோயின் கேரக்டர்னு சொன்ன போது, தயங்கி னீங்களா? ‘இல்லை. கொஞ்சம் கூட யோசிக்கலை. முதல் காரணம் அது மணி ரத்னம் சார் படம்.
அதே மாதிரி யாராலயும் மறுக்க முடியாத ஸ்கிரிப்ட் அது. நல்ல படத்துல நானும் இருந்தி ருக்கேன் என்கிற திருப்தி எனக்கு உண்டு.’’
சினிமோட்டோ கிராபி படிக்கணும்னு கூட ஆசைப் பட்டீங்களாமே?
`பூனா ஃபிலிம் அண்டு டி.வி இன்ஸ்டிட்யூட்ல சினிமோட் டோகிராபி படிக்க பிளான் பண்ணி யிருந்தேன். என்னோட முதல் தெலுங்குப் படம் ‘அலா மொடலாயிண்டி’ கமிட்டான டைம் அது.
அந்த ஷூட்டிங் ஒரு வருஷம்கிட்ட போச்சு. படம் பெரிய ஹிட். படிக்கணும்கிற எண்ணமும் மாறி, நான் சினிமாவுக் குள்ள வந்துட்டேன்.''
ஏற்கெனவே ‘ராஜா ராணி’யிலயும் ‘தெறி’யிலயும் உங்களை நடிக்க வைக்க அட்லி ட்ரை பண்ணி, நீங்க `நோ' சொல்லிட்டீ ங்களாமே...
‘ஆமாம். அப்ப அந்தப் படங்கள் வேண்டாம்னு சொல்ல நிறைய காரணங்கள் இருந்தன.
அந்தப் படங்கள் வந்து ரொம்ப நாளானதால, என்ன காரணத்துக் காக `வேண்டாம்' னு சொன்னேன்னு கூட இப்ப எனக்கு சரியா ஞாபகம் இல்லை.’’
செமயா பாடுவீங்களே.... பின்னணிப் பாடகி நித்யா மேனன் என்ன ஆனாங்க?
‘`தமிழ்ல ‘மாலினி 22 பாளையங் கோட்டை’ உள்பட தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்கள்ல பாடியி ருக்கேன். வாய்ப்புகள் வந்தா தொடர்ந்து பாட நான் ரெடி.’'
தமிழ்ப் படங்களில் நடிக்க `ஓகே' சொல்லணும்னா உங்க டிமாண்ட் என்ன... கதையா, கேரக்டரா, பேனரா, சம்பளமா?
``இந்த நாலுமே இல்லை. அந்த சிச்சு வேஷன்ல என் மனநிலை எப்படி யிருக்கோ, அதைப் பொறுத்தது.
உதாரண த்துக்கு ஒரு படம் பயங்கர வயலன்ட் சப்ஜெக்ட்டா இருக்கும் போது, அந்த டைம்ல என் மைண்டு ரொம்ப அமைதியா இருந்தா நான் அந்தப் படம் பண்ண மாட்டேன்.
`ஓகே'னு தோணினா பண்ணுவேன். ஸோ, எனக்கு `செட் ஆஃப் ரூல்ஸ்'னு எதுவு மில்லை. அது ரொம்ப இயல்பான, சட்டென எடுக்கப்படுகிற ஒரு டெசிஷன்.
சம்பளத்தையோ, பேனரையோ, வேற எதையுமோ மண்டையில போட்டு யோசிச் செல்லாம்
நான் எந்தப் படத்துக்கும் ஓகே சொல்ற தில்லை. அந்தப் படம் ஜெனியூ னாங்கிறதை மட்டும் தான் பார்ப்பேன்.
அவங்க அந்தப் படத்தைப் பண்றதுக் கான நோக்கம் என்ன... நல்ல படம் பண்ண ணும்கிற நோக்கத்தோட இருக்காங் களானு மட்டும்தான் நான் பார்ப்பேன்.’’
விமர்சனங்கள் உங்களைப் பாதிக்குமா?
‘`பாராட்டுகள் போகிற போக்குல உங்களைச் சந்தோஷப் படுத்திட்டுக் கடந்துடும். நம்ம குறைகளைச் சுட்டிக் காட்டற விமர்சனங்கள் அப்படி யில்லை.
பாராட்டு களை விடவும் விமர்சனங்கள் எனக்கு முக்கியம். நல்ல வேளையா, நான் இதுவரை அப்படி மோசமான விமர்சனங் களைப் பார்த்த தில்லை!’’
நடிப்புல ஃபார்மலான ட்ரெயினிங் இல்லை... சினிமா பின்னணி கிடையாது. அப்படியும் நித்யா மேனனின் நடிப்பு நாளுக்கு நாள் மெருகேற என்ன தான் காரணம்?
``முதல் படத்து லேருந்தே அப்படித் தான். க்ளாஸ் போகலை. யாரையும் பார்த்துக் கத்துக்கலை. சின்ன வயசுலயும் நான் இவ்வளவு தான் கேபபுளா இருந்தேன். இப்பவும் அதே அளவுக்குத் தான் இருக்கேன்.’’
சினிமா இண்டஸ்ட்ரியில ஆணாதிக்கம் இருக்கிறதா ஃபீல் பண்றீங்களா?
சினிமா இண்டஸ் ட்ரியை மட்டும் தனியா எடுத்து வெச்சு அதுல மட்டும் தான் ஆணாதிக்கம் இருக்கிறதா எல்லாரும் நினைக் கிறாங்க. அப்படி யில்லை. உலகமே ஆணாதிக்கம் நிறைஞ்சது தான்.
அதுல ஒரு பார்ட்தான் சினிமா இண்டஸ்ட்ரி. சிம்பிளா சொல்ல ணும்னா ஆணாதிக்க உலகத்துல தான் நாம வாழ்ந்திட்டிருக்கோம். அதுக்குள்ள தான் சினிமாவும் இருக்கு.
அதை ஏத்துக் கிட்டுத்தான் ஆகணும். அதை மாத்தற தெல்லாம் தனி மனிதர் களுடைய விருப்பம்.’’
நீங்க நடிச்சதுலயே பெஸ்ட்டுனு ஃபீல் பண்ணின கேரக்டர் எது? பண்ணியிருக் கவே கூடாதுனு வருத்தப்பட வெச்ச கேரக்டர் எது?
`ரொம்பப் பிடிச்சதுன்னா ‘ஓகே கண்மணி’ யில என் கேரக்டர். தாராவும் நானும் கிட்டத் தட்ட ஒரே மாதிரி. அந்தப் படமும் கேரக்டரும் பண்றதுக்கு சந்தோஷ மாகவும் ஈஸியாகவும் இருந்தது.
பண்ணி யிருக்கவே கூடாதுனு நினைக்க வெச்ச கேரக்டர்ஸ் எதுவு மில்லை. லாரன்ஸ் கூட பண்ணின ‘காஞ்சனா 2’ கேரக்டரும் பிடிச்சுதான் நடிச்சேன்.
இதுதான் என் ஜானர்னு நான் எதையும் ஃபிக்ஸ் பண்ணிக் கலை. அந்தப் படத்துல நூறு பர்சென்ட் சின்சியா ரிட்டியை காட்டற போது, அது என் ஜானர் ஆயிடுது. அதாவது சின்சியாரிட்டி இஸ் மை ஜானர்!’’
மெர்சலுக்குப் பிறகு?
அப்பாவின் மீசை' படத்தோட ரிலீஸுக்காக ஆர்வமா வெயிட் பண்ணிட் டிருக்கேன். ‘ப்ராணா’னு ஒரு படம் பண்ணிட் டிருக்கேன்.
அது மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தினு நாலு மொழியில ரெடியா கிட்டிருக்கு.
ரொம்ப வித்தியாச மான படம். நேஷனல் அவார்டு வாங்கின வி.கே. பிரகாஷ் டைரக்ட் பண்றார். பி.சி.ஸ்ரீராம் சார்,
ஆஸ்கார் அவார்டு வாங்கின ரசூல் பூக்குட்டினு ப்ரில்லியன்ட் டெக்னீஷியன்ஸ் வொர்க் பண்ணிட்டி ருக்காங்க.
முதன் முறையா `சரவுண்ட் சவுண்ட் சிங்க்'னு ஒரு டெக்னிக்கை ட்ரை பண்ணியி ருக்காங்க. டப்பிங் இருக்காது.
இந்த டெக்னாலஜியில நாலு மொழியில நடிக்கிறது எனக்கும் ஃபர்ஸ்ட் டைம் எக்ஸ்பீரியன்ஸ். சேலஞ்சிங்கா இருந்தது.
ஆனா, ‘ரொம்ப ஈஸியா பண்ணிட் டீங்க’னு எல்லாரும் சொன்னாங்க. அரை நாள்ல எடுக்கிறதா
அவங்க பிளான் பண்ணின சீனை நான் ஒன்றரை மணி நேரத்துல முடிச்சிடறேன். ஸோ, அவங்களே ஷாக் ஆகிடறாங்க!’’
கேரளாவு லேருந்து வர்ற நடிகை களுக்குத் தமிழ்ல மிகப்பெரிய வரவேற்பு இருக்கு. நீங்க அதை சரியா யூஸ் பண்ணலைன்னு தோணுதா?
`இல்லை... எனக்கு என்ன முடியுமோ அதை மட்டும் தான் பண்ண முடியும். எனக்கு இப்போ ஒரு பெயர் கிடைச்சது க்குக்கூட, நான் அப்படி கன்னா பின்னானு எல்லா படங்களும் பண்ணாதது தான் காரணம்.
ரொம்ப ரொம்ப ஸ்பெஷ லான கேரக்டர்ஸ் மட்டும் பண்ணினா போதும்னு நினைக்கிறது... தேடி வர்ற சான்ஸை மிஸ் பண்ணக் கூடாதுனும் நினைக்கிறது...
இப்படி ரெண்டையும் ஒருத்தரால பண்ண முடியாது. நாம எப்படி இருக்கோம், எப்படிப் பட்ட படங்களை கமிட் பண்றோம் கிறதைப் பார்த்து தான் பெயர் கிடைக்கும்.
என்னால எல்லா படங்களு க்கும் ஓகே சொல்ல முடியாது. என் லைஃப் ரொம்பவே சூப்பரா இருக்கு.
`நித்யா மேனனுக்கு வாய்ப்பு களைச் சரியா யூஸ் பண்ணத் தெரியலை, பொழைக்கத் தெரியலை 'னு எனக்காக யாரும் வருத்தப்பட வேண்டிய தில்லை.
இதுக்கு மேல எனக்கு ஒண்ணும் வேண்டாம். நடிப்புங்கிறது என் ஆத்ம திருப்திக் காக மட்டுமே நான் பண்ற விஷயம்.
இது எனக்கொரு பிசினஸும் இல்லை... கரியரும் இல்லை. கடவுள் என் முன்னாடி கொண்டு வந்து வெச்ச திறமை இது.
அதை நான் அப்படித் தான் ட்ரீட் பண்ணுவேன். மத்தபடி எனக்கு நம்பர் ரேஸ்ல எல்லாம் நம்பிக்கையே இல்லை.
உண்மையில அப்படி யாரும் நம்பர் ஒன்னா இருக்கவும் முடியாது. நாமா, நம்ம சந்தோஷத்துக் காகக் கற்பனையா அப்படி ஃபீல் பண்ணிக் கறோம். அவ்வளவு தான்.’’
Thanks for Your Comments