தஞ்சாவூரில் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் வைத்திருந்த ஃப்ளெக்ஸ் போர்டை மாநகராட்சி ஊழியர்கள் அகற்ற முயன்றனர்.
அதற்கு டி.டி.வி ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, அதை ஏற்றிச் செல்வதற்காகக் கொண்டு வரப்பட்ட மாநகராட்சி வாகனத்தையும் சிறை பிடித்தனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. டி.டி.வி.தினகரன் தஞ்சாவூர் மாவட்டத்தில் பிப்ரவரி 10-ம் தேதி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி என்ற பெயரில் நடத்தப்பட உள்ள நிகழ்ச்சி யில் மக்களைச் சந்திக்கிறார்.
இது தொடர்பாக அவரின் ஆதரவாளர்கள் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தி ஆலோசனை செய்தனர். இதற்காகத் தஞ்சை ரயிலடியில் டி.டி.வி. தினகரனை வரவேற்கும் வகையில், அவரின் ஆதரவாளர்கள் வரவேற்பு ஃப்ளெக்ஸ் போர்டு வைத்திருந்தனர்.
இந்த நிலையில் மாநகராட்சி ஊழியர்கள், தினகரன் ஆதரவாளர்கள் ரயிலடியில் வைத்திருந்த ஃப்ளெக்ஸை அகற்ற முயன்றனர்.
இதைக் கேள்விப் பட்ட அவரின் ஆதரவாளர்கள், அந்த இடத்தில் திரண்டதோடு, ப்ளெக்ஸை எடுத்துச் செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாநகராட்சி வாகனத்துக்கு முன் அமர்ந்து வாகனத்தை சிறை பிடித்தனர்.
இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தினகரன் ஆதரவாளர்களுக்கு விளக்கமளித்த மாநகராட்சி ஊழியர்கள், நாங்கள் உங்க ஃப்ளெக்ஸ் போர்டை மட்டும் எடுக்க வில்லை.
எல்லா தரப்பிலும் வைக்கப் பட்டிருக்கிற ப்ளெக்ஸையும் தான் எடுக்கப் போகிறோம் என்றனர். அதை ஏற்றுக் கொள்ள மறுத்த டி.டி.வி.தினகரன் அணியினர், எங்கள் மக்கள் செல்வர், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வருகிறார்.
அதற்கு இப்போதி லிருந்தே பலத்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் கிளம்பி யுள்ளது. அவரை நாங்க பெரிய அளவில் வரவேற்க இருக்கிறோம்.
அதைத் தடுக்கும் விதமாகவும் நாங்கள் பெயர் வாங்கி விடக்கூடாது என்பதற் காக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தூண்டுதலின் பேரில் தான் இப்படிச் செய்கிறார்கள்.
ஏன் எங்க ஃப்ளெக்ஸை மட்டும் முதலில் எடுக்க வேண்டும். அங்கு வைக்கப் பட்டிருந்த வேறு ஒரு ஃப்ளெக்ஸ் போர்டை அகற்றுவதில் மாநகராட்சி ஊழியர்கள் ஆர்வம் காட்டவில்லை என்று கூறி முன்னாள் அமைச்சர் வைத்திலிங்க த்துக்கு எதிராகக் கோஷமிட்டனர்.
பின்னர், மாநகராட்சி அதிகாரிகள் வந்து, டி.டி.வி. தினகரன் அணியினரை சமாதானம் செய்ததோடு, எடுக்கப்பட்ட ஃப்ளெக்ஸ் போர்டையும் அதே இடத்தில் போட்டு விட்டுச் சென்றனர்.
நாங்க யாரு எங்க கிட்டயேவா? எனக்கூறியபடி கலைந்து சென்றனர் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள்.
Thanks for Your Comments