குட்டி க்யூட் ஸ்மைலிகள் தான் கீர்த்தி சுரேஷின் அடையாளம். விஜய் 62, சாமி 2, சண்டைக்கோழி 2, மகாநதி என கீர்த்தி இப்போது பிசியோ பிசி.
என்ன கேள்வி கேட்டாலும் முதலில் சிரித்து விட்டுத் தான் பதில் சொல்கிறார் ஸ்மைலி சுரேஷ். அவரிடம் சிரித்துக் கொண்டே பேசியதில் இருந்து...
விஜய், சூர்யா, விக்ரம், விஷால் என முதல் வரிசை ஹீரோக்க ளுடனேயே தொடர்ந்து நடிக்கி றீங்களே எப்படி?
சிரிக்கிறார்... ரொம்ப சந்தோஷமா இருக்கு... அதே சமயம் கொஞ்சம் பயமாவும் இருக்கு.
ஆனா, எந்த ஃபீலிங்கையும் வெளில காட்டிக்காம இருக்கேன். ரொம்ப எக்ஸைட் ஆகக் கூடாதுன்னு அப்படியே கட்டுப் படுத்தியி ருக்கேன்.
பெரிய ஹீரோஸ் கூட நடிக்கிறோம்னு யோசிச்சா பயம் அதிகமாயிடும்.
என்ன சொல்றாங்க உங்க ஹீரோஸ்?
என்ன சொல்றாங்க சிரிக்கிறார்... எல்லோருமே ரொம்ப ஃப்ரெண்ட்லியா இருக்காங்க.
ஒவ்வொருத்தர் கூட படம் பண்றதும் ஒவ்வொரு விதமான அனுபவம். அம்மா ஹீரோயினா
இருந்தப்ப சிவகுமார் சார் ஜோடியா நடிச்ச படங்களைப் பார்த்துட்டு, `ஒரு நாள் அவர் பையனுக்கு ஜோடியா நான்
நடிப்பேன்னு காமெடியா சொல்லி யிருக்கேன். தானா சேர்ந்த கூட்டம் படத்துல அது நடந்திருச்சு. சூர்யா சார் ரொம்ப சைலன்ட்.
அந்நியன் படத்தோட 100-வது நாள் விழாவுக்கு விக்ரம் சார் கேரளா வந்திருந்த போது அந்த நிகழ்ச்சியோட பார்வை யாளர்கள்ல
நானும் ஒருத்தி. இன்னிக்கு அவர்கூட சாமி 2 படத்துல ஹீரோயின். என்னாலேயே நம்ப முடியலை.
பைரவா’ முடிச்சு மறுபடி விஜய் சார்கூட அடுத்த படம். இந்த வாய்ப்பை நான் கொஞ்சம்கூட எதிர் பார்க்கலை.
இப்பவும் எனக்குள்ளே இருக்கிற அவரோட ரசிகை கொஞ்சமும் மாறவே இல்லை.
மாஸ் ஹீரோஸ் கூட நடிக்கிறது ஒரு வகையான கம்ஃபர்ட். அவங்க அனுபவங்கள்ல இருந்து நிறைய கத்துக்க முடியும்.
மகாநதி படத்தில் நீங்கதான் சாவித்ரி... எப்படி வந்திருக்கு படம்?
இந்தப் படமும் கேரக்டரும் என் கரியர்ல மிகப்பெரிய எக்ஸ்பீரியன்ஸ். நிறைய சவால்கள்.
நடிச்சு முடிச்சு இப்ப பார்க்கும் போது என் நடிப்பின் மீது எனக்கே மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கு. சாவித்ரியம்மா மாதிரி ஒரு லெஜண்ட்...
அவங்களை மாதிரியே நான் நடிக்கணும் கிறது கஷ்டமா இருந்தது. ஆனா, சமாளிச்சு நடிச்சிட்டேன். நல்ல படம் பண்ணின திருப்தி காலத்துக்கும் இருக்கும்.
மகாநதி படத்துல சமந்தாவும் நடிச்சிருக்காங்களே... அவங்க ளுக்கு என்ன மாதிரியான கேரெக்டர்?
கதைப்படி நான் சாவித்ரியா இருந்தாலும், படத்துல சமந்தாவு க்கும் முக்கிய மான கேரக்டர்.
ரெண்டு பேருக்கும் படத்துல ஒரே ஒரு காம்பினேஷன் சீன் தான். அதனால் அவங்களோட பேச நேரம் கிடைக்கல.
முக்கியமான படங்கள் நிறைய பண்ணிட்டிருக்கீங்க... சினிமா உலகம் புரிஞ்சிடுச்சா?
முதல் படத்துல நடிகையா கமிட் ஆன போது அம்மா பங்ச்சுவலா இருக்கணும்...
லைட் பாய்ல இருந்து டைரக்டர் வரைக்கும் எல்லோருக்கும் மரியாதை கொடுக்கணும்னு அட்வைஸ் பண்ணினாங்க.
என் பேரைக் காப்பாத்துனு அப்பா சொன்னார். அந்த ரெண்டு அட்வைஸ்படி தான் இன்னைக்கு வரைக்கும் சினிமாவில் இருக்கேன்.
மத்தபடி சினிமாவைப் புரிஞ்சிக்க யாராலையும் முடியாது. அதுக் கெல்லாம் மிகப்பெரிய அனுபவம் வேணும். நான் ரொம்ப ஜூனியர்.
கீர்த்தி சுரேஷின் கனவு என்ன?
வெறும் ஹீரோயினா வந்துட்டுப் போகாம வித்தியாச மான கதாபாத்தி ரங்கள்ல நடிக்கணும் கிறது தான் என்னோட ஆசை.
பாகுபலி மாதிரி ஒரு படத்துல நடிக்கணும் கிறது என்னோட கனவு. அதே போல் ரஜினி சார் கூட ஒரு படம் பண்ணிடணும்னு ஆசையா இருக்கு.
ஆனா, அதுக்கான வாய்ப்பு ரொம்பக் குறைவுனு மூளைக்குத் தெரியுது. மனசு தான் விடாம துரத்துது... பார்ப்போம். இடைவெளி விட்டு விட்டு சிரிக்கிறார்.
Thanks for Your Comments