அரசுக் காலண்டரில் மோடி படம் !

0
தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை ஆண்டு தோறும் அரசுக் காலண்டரை வெளி யிடுவது வழக்கம் 
அரசுக் காலண்டரில் மோடி படம் !
அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான காலண்டர் வெளியிடப் பட்டுள்ளது. அதில் முதல் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. 

அது முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்கும் படமாகும். 

அதே பக்கத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வுடன் இப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிற்கும் புகைப்படம் ஒன்றும் இடம் பெற்றுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், தமிழக அரசு மத்திய அரசை அனுசரித்துப் போவதாக விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. 
ஒவ்வொரு திட்டத்தை யும் மத்திய அரசின் மனம் கோணாமல் நிறை வேற்ற தமிழக அரசு முயன்றதாக எதிர்க் கட்சிகள் புகார் கூறி வருகின்றன. 

அது ஒரு புறமிருக்க தமிழக ஆளுநர் மாநிலம் முழுவதும் ஆய்வுகள் மேற் கொள்வதும் அரசிய லமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று எதிர்க் கட்சித் தலைவர்கள் கொந்தளித்து வருகிறார்கள்.

இந்நிலை யில், அரசுக் காலண்டரில் பிரதமரின் படம் இடம் பெற்றிருப்பது தொடர் பாகச் சமூக வலை தளங்களில் விவா தங்கள் எழுந் துள்ளன. 
இந்தக் காலண் டர்கள் அரசு அலுவல கங்களுக்கு அனுப்பப்படும் என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings