முதலில் நான் ஸ்பேஸ் த்ரில்லர் படத்தில் நடிக்கிறேன் என்ற சொன்ன வுடன் யாருக்கும் நம்பிக்கை யில்லை. என் மகன் ஆரவ் இப்படத்தில் அறிமுக மாகியிருக் கிறார் என்று ஜெயம் ரவி பேசினார்.
இந்தியாவின் முதல் ஸ்பேஸ் த்ரில்லர் படமாக உருவாகி யிருக்கும் 'டிக்:டிக்:டிக்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை யில் நடை பெற்றது.
'டிக்:டிக்:டிக்' படத்தின் இயக்குநர் சக்தி சக்தி சௌந்தர்ராஜன், ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஜெயபிரகாஷ், இசைய மைப்பாளர் இமான் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் ஜெயம் ரவி பேசுகையில், ''முதலில் நான் ஸ்பேஸ் த்ரில்லர் படத்தில் நடிக்கிறேன் என்ற சொன்னவுடன் யாருக்கும் நம்பிக்கை யில்லை.
அதிலும் 'மிருதன்' இயக்குநரின் இயக்கத்தில் நடிக்கிறேன் என்று சொன்ன பிறகும் யாரும் நம்ப வில்லை.
இருபது வருடத்திற்கு முன் தண்ணீரை விற்கப் போகிறேன் என்று சொல்லி யிருந்தால் யாரும் நம்பி யிருக்க மாட்டார்கள்.
பிறகு நல்ல படம் எடுத்தால் நாங்கள் பார்ப்போம் என்று ரசிகர்கள் வைக்கும் நம்பிக்கை யினால் தான் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
Thanks for Your Comments