மலையாள நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாளப் படத்தில் ‘மாணிக்ய மலராய பூவி’ என்ற பாடல் வெளியானது.
இதில் நடித்திருந்த இளம் மலையாள நடிகை பிரியா வாரியர், தனது கண் அசைவால் காதலனைப் பார்க்கும் காட்சி இடம் பெற்றது. இந்தக் காட்சிக்கு மட்டும் மில்லியன் கணக்கில் லைக்குகள் குவிந்தன.
சில நிமிடங்கள் தோன்றும் இந்தப் பாடல் காட்சியின் மூலம், இந்திய அளவில் தனக்கென ரசிகர் கூட்டத்தை உண்டாக்கினார்.
பிரியா வாரியர். இஸ்லாமிய ர்களின் மனதைப் புண்படுத்தும் விதத்திலும், மத உணர்வுகளைக் காயப்படுத்தும் நோக்கிலும்,
இந்தப் பாடல் அமைந்துள்ள தாக தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா மாநில காவல் நிலை யங்களில் பிரியா வாரியர் மீது வழக்குகள் பதிவு செய்யப் பட்டன.
இந்தப் பாடலை எதிர்த்து, அளிக்கப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் எனப் பிரியா வாரியர், நேற்று உச்சநீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா மாநில காவல் நிலையங்களில் பிரியா வாரியர் மீது தரப்பட்ட புகார்களில், அவர்மீது எவ்வித வழக்கும் பதிவு செய்து, விசாரணை நடத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
Thanks for Your Comments