நடிகை ஸ்ரீதேவி இறந்த அன்று ஹோட்டலில் நடந்தது? | Actress Sridevi's death happened at the hotel?

0
நடிகை ஸ்ரீதேவி யின் மரணம், அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி யுள்ளது. 


துபாயி லிருந்து அவரின் உடலை இந்தியாவு க்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் சகோதரி மகனும் நடிகருமான மோகித் மார்வா திருமணம், கடந்த 20-ம் தேதி துபாயில் நடந்தது. 

திருமண த்தில் பங்கேற்க இளைய மகள் குஷி, போனி கபூர், ஸ்ரீதேவி ஆகியோர் சென்று ள்ளனர். 

மூத்த மகள் ஜான்வி 'தடக்' என்ற பட சூட்டிங்கில் இருந்ததால், திருமண த்தில் பங்கேற்க வில்லை. 

திருமணம் முடிந்த பின், போனி கபூரும் மகள் குஷியும் மும்பை திரும்பினர். ஸ்ரீதேவி மட்டும் துபாயில் உள்ள எமிரேட்ஸ் டவர் ஹோட்டலில் தங்கியிருந் துள்ளார்.

மும்பை திரும்பிய போனி கபூர், மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டு மென்பதற்காக, அவரிடம் எந்தத் தகவலும் தெரிவிக்காமல் 24-ம் தேதி மீண்டும் துபாய் சென்றுள்ளார். 

மாலை 5.30 மணியளவில், திடீரென்று மனைவி யின் முன்னர் போய் போனி கபூர் நின்றதும் ஸ்ரீதேவி ஆச்சர்யமும் சந்தோஷமும் அடைந்துள்ளார். 

பின்னர், இருவரும் 15 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந் துள்ளனர். மனைவியை டின்னருக்கு அழைத் துள்ளார் போனி கபூர்.

ரெடியாகி வருவதாகச் சொல்லி விட்டு, அவர் பாத்ரூமு க்குச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகி யும் வெளியே வரவில்லை. 

சந்தேக மடைந்த போனி கபூர், கதவைத் தட்டியுள்ளார். உள்ளே இருந்து சத்தம் வரவில்லை. 

பின்னர், ஹோட்டல் உதவியாளர் களுடன் கதவை உடைத்துப் பார்த்த போது, கழிவறை யில் மயக்க மடைந்த நிலையில் அவர் கிடந்துள்ளார். 

மருத்துவ மனையில் அவரை சோதித்த மருத்துவர்கள், முன்னரே அவர் இறந்து விட்டதாகத் தெரிவித் துள்ளனர். 

பின்னர், இரவு 9 மணியள வில் போலீஸுக்குத் தகவல் அளிக்கப் பட்டுள்ளது.

ஸ்ரீதேவி யின் ரத்த மாதிரிகள் நேற்றிரவு பரிசோதனை க்கு எடுக்கப் பட்டுள்ளன. 

அதன் முடிவு வந்த பிறகே, ஸ்ரீதேவியின் உடல் இந்தியா கொண்டு வருவதற் கான நடை முறைகள் மேற்கொள்ளப் படும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings