பஞ்சாப் வங்கியில் ரூ.11,400 கோடி மோசடி நடந்த விவகார த்தில், ரிலையன்ஸ் நிறுவனர்
திருபாய் அம்பானி யின் சகோதரர் நாதுபாய் அம்பானி யின் மகன் விபூல் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட் டுள்ளனர்.
விபூல், ரிலையன்ஸ் அதிபர்கள் முகேஷ் மற்றும் அனில் அம்பானிக்கு சகோதரர் முறை ஆவார்.
நிரவ் மோடியின் ஃபயர்ஸ்டார் நிறுவன த்தின் தலைமை நிதி அதிகாரியாக இவர் 2014- ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்.
இவரின் பாஸ்போர்ட்டை யும் சிபிஐ கைப்பற்றி யுள்ளது. விபூல் அம்பானி யுடன் மேலும் மூவர் கைது செய்யப்பட் டுள்ளனர்.
விபூல் அம்பானி, முதலில் ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த இன்டஸ்ட்ரியல் இன்ஜினீயரிங் நிறுவனத்தில் பணி புரிந்தார்.
1993- ம் ஆண்டு, ரிலையன்ஸில் இருந்து விலகி, பல்வேறு நிறுவனங் களில் பணியாற்றிய பிறகு, நிரவ்-வின் ஃபயர்ஸ்டார் நிறுவன த்தில் இணைந்தார்.
ஃபயர்ஸ்டார் நிறுவன த்தின் மூத்த அதிகாரி அர்ஜூன் பாட்டில், நட்ஷத்ரா க்ரூப் நிதித்துறைத் தலைவர் கபில் கான்டேல்வால், கீதாஞ்சலி நிறுவன மேலாளர் நிதிஷ் ஷாகி ஆகியோரும் கைது செய்யப்பட் டுள்ளனர்.
பஞ்சாப் நேஷனல் வங்கி, கீதாஞ்சலி நிறுவனங் களின் ஊழியர் களிடமும் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வரு கின்றனர்.
மும்பையில் அந்தேரி, டோம்பிவிலி, நவிமும்பை பகுதி களில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் வீடுகளில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப் பட்டுள்ளன.
மும்பை அருகே அலிபாக்கில் உள்ள நிரவ் மோடியின் பண்ணை வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் கிடைத் துள்ளன.
மோசடி நடந்த மும்பை ப்ரீச்கேண்டி பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைமை மேலாளர் பெச்சு பி. திவாரி உள்ளிட்ட மூவரை ஏற்கெனவே கைதுசெய்து சிபிஐ விசாரித்து வருகிறது.
Thanks for Your Comments