பி.ஜே.பி-க்கு பலம் இல்லை.... தமிழிசை?

0
தமிழகத்தில் தேசியக் கட்சிகள் காலூன்ற முடியாது என துணை முதலமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப் பாளருமான ஓ.பன்னீர் செல்வம் பேசியிருப்பது தமிழக அரசியலில் கடும் அதிர்வை ஏற்படுத்தி யுள்ளது.
பி.ஜே.பி-க்கு பலம் இல்லை.... தமிழிசை?
பி.ஜே.பி-யுடன் கைகோத்துக் கொண்டு, தமிழகத்தை ஓ.பி.எஸ். அடகு வைத்து விட்டார் என அரசியல் விம ர்சகர்கள் கருத்து வெளி யிட்டிருந்தனர். 

அது மட்டுமன்றி, அவர் முதல்வராக இருந்த போது, அவரைப் பின்னால் இருந்து பி.ஜே.பி. இயக்குகிறது என்ற குற்றச் சாட்டும் எழுந்தது.

இந்த நிலையில், சென்னை யில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர் களுக்குப் பேட்டியளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஒட்டு மொத்த தேசியக் கட்சி களையும் தாக்கும் வகையில் பேசியுள்ளார். 

அப்போது அவர், தமிழகத்தில் தேசியக் கட்சிகள் எந்தக் காலத்திலும், எந்த நிலையிலும் காலூன்ற முடியாது. அது தான் தமிழக மக்களின் தீர்ப்பு என்றார். அவரின் இந்தக் கருத்து, தமிழக அரசியல் களத்தில் உற்று நோக்கப் படுகிறது.

இது குறித்து, பி.ஜே.பி. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜ னிடம் பேசிய போது, “தேசியக் கட்சிகள் தமிழகத்தில் காலூன்ற முடியாது 

என ஓ.பன்னீர் செல்வம் பேசிய தாக கேள்விப் பட்டேன். அவர் பி.ஜே.பி-யை மனதில் வைத்து அப்படிப் பேசியிருக்க மாட்டார் என்பது என்னுடைய எண்ணம்.
பன்னீர் செல்வம் மட்டுமல்ல, பி.ஜே.பி-யை மறை முகமாகத் தாக்கும் விதத்தில், தமிழகத்தில் தேசியக் கட்சிகள் காலூன்ற முடியாது’ என வேறு சில கட்சியைச் சேர்ந்தவர் களும் சொல்லத் தொடங்கி யுள்ளனர். 

பி.ஜே.பி.க்கு தமிழக த்தில் பலமே இல்லை என்றும் பி.ஜே.பி-யால் தமிழக த்தில் ஆட்சிக்கு வர முடியாது என்றும் கூறி வருகின்றனர்.

ஒ பன்னீர்செல்வம் -எடப்பாடி பழனிசாமி

பி.ஜே.பி- யைக் குறிப்பிட்டு ஓ.பன்னீர் செல்வம் சொன்னதாக நான் எடுத்துக் கொள்ள வில்லை. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை மனதில் வைத்து அவர் இவ்வாறு கூறியி ருக்கலாம். 

பி.ஜே.பிக்கு பலம் இல்லை என்று திரும்பத் திரும்பச் சொல்வதை விட்டுவிட்டு, விலகிப் போங்களேன். இது போன்று ஏன் பேசிக் கொண்டிருக்க வேண்டும்? வார்த்தைகளால் எங்களுடைய பலத்தை நிரூபிப்பதை விட செயலில் நிரூபித்துக் காட்டுவோம். 

அப்போது யார் பலம் பொருந்தி யவர்கள் என்பது தெரியவரும். ஒரு தேசியக் கட்சி திடீரென காலூன்றி வளர்ச்சி பெறுவது சாதாரண காரியமல்ல; 
அதே நேரத்தில் அது முடியாத காரியமும் இல்லை. அந்த நம்பிக்கை யோடு தான் உள்ளாட்சித் தேர்தலுக் கான தேர்தல் படிவத்தை நாங்கள் கட்சியின் இணைய தளத்தில் வெளியிட் டுள்ளோம். 

இந்தத் தேர்தலில், ‘வெளிப்படையான நிர்வாகத்தை நாங்கள் தருகிறோம். அதனால் பி.ஜே.பி-யைப் புறக்கணிக் காமல் எங்களுக்கு ஆதரவு கொடுங்கள்' என்ற கோரிக்கையை முன் வைக்க வுள்ளோம். 

பி.ஜே.பி. போன்ற வலுவான கட்சியால் மட்டுமே மக்கள் நலத் திட்டங்களைத் திறம்பட செயல் படுத்த முடியும். அதற்கான மாற்றத்தை நாங்கள் தேடுகிறோமே தவிர, ஆட்கள் யாரையும் தேடவில்லை. 

அது போன்ற தொரு சூழ்நிலை பி.ஜே.பி-யில் இல்லை என்றார். இது தொடர்பாக மேலும் சில கேள்விகளை தமிழிசை சவுந்தரராஜ னிடம் முன் வைத்தோம்.

கம்யூனிஸ்ட் கட்சியையோ, காங்கிரஸ் கட்சியையோ ஓ.பி.எஸ் குறிப்பிடு கிறார் என்றால், அவர் அந்தக் கட்சிகளின் பெயர்களைக் கூறியிருக் கலாமே? தேசியக் கட்சிகள் எனப் பொதுவாக ஏன் சொல்ல வேண்டும்
அவர் சொல்லிய வார்த்தை களைத் தனித் தனியாக நான் ஆய்வு செய்ய விரும்ப வில்லை. மேலும் ஓ.பி.எஸ்ஸின் அந்தப் பேச்சு குறித்து சுதந்திர மாகச் சிந்திக்க எனக்கு உரிமை இருக்கிறது. 

அவற்றை எந்த வகையில் நான் எடுத்துக் கொள்ள வேண்டுமோ, அந்த வகையில் எடுத்துக் கொள்வேன். தேசியக் கட்சிகள் என்று சொன்னால் பி.ஜே.பி- யும் அதில் இடம் பெற்றிருக் கிறது என்பது பன்னீர் செல்வத்துக்குத் தெரியாதா? 

மேலும், அவர் உங்கள் கட்சியுடன் இணக்கத் துடன் உள்ளார். அப்படி இருக்கும் போது ஏன் அவர் இவ்வாறு ஒரு கருத்தை வெளியிட வேண்டும்?

அவர் இணக்கத் துடன் தான் உள்ளார்... ஆனால், பி.ஜே.பி--யைச் சொல்லி யிருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன். ஒன்றை மட்டும் உங்களுக்குத் தெளிவு படுத்த விரும்புகிறேன். 
ஓ.பன்னீர் செல்வத்தைப் பொறுத்த வரை, மத்திய அரசுடன் தான் இணக்க த்துடன் உள்ளார். எங்கள் கட்சியுடன் அல்ல. அவருக்கு கருத்துச் சொல்ல உரிமை உள்ளது. 

அந்த அடிப்படையில் அவர் பேசியிருக்கலாம். அது பற்றி நாங்கள் ஆய்வு செய்ய விரும்ப வில்லை.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings