கேரள மாநிலம் அட்டப் பாடியில் 27 வயது பழக்குடியின இளைஞர் மது, கும்பல் ஒன்றால் அடித்துக் கொல்லப் பட்டார்.
மதுவின் உடற்கூறு ஆய்வறிக்கை முழுவதுமாக வெளியிடப் பட்டுள்ளது. அறிக்கையின் படி, அவரின் வயிற்றில் ஒரு பருக்கை சோறுகூட இல்லை என்று தெரிய வந்துள்ளது.
சில காட்டுப் பழங்களும் வாழைப்பழத் துண்டு ஒன்றே ஒன்று மட்டுமே அவரின் வயிற்றுக்குள் இருந்துள்ளது.
பல நாள்கள் பட்டினியாகக் கிடந்துள்ளதால், அவரின் எலும்புகளும் தசைகளும் மிகவும் பலவீனமான நிலையில் இருந்துள்ளன.
வியாழக் கிழமை மது அடித்துக் கொலை செய்யப் பட்டுள்ளார். வெள்ளிக் கிழமை திருச்சூர் மாவட்ட மருத்துவ மனைக்குக் கொண்டு வரப்பட்டது. சனிக்கிழமை அவரின் உடல் உடற்கூறு ஆய்வுக் குட்படுத்தப் பட்டது.
இந்தியாவில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய தால், சுமார் 3 மணி நேரம் உடற்கூறு ஆய்வு நடந்தது. அவரின் உடல் முழுவதும் காயம் இருந்துள்ளது. தலையிலும் பலத்த காயம் காணப் பட்டுள்ளது.
மார்புக்கூடு இரண்டாக உடைந்துள்ளது. மதுவின் உள்ளுருப்புகள் தடயவியல் பரிசோதனை க்கு அனுப்பப் பட்டுள்ளன. அந்த அறிக்கை வந்த பின், மேலும் சில உண்மைகள் தெரிய வரலாம்.
மத்திய பழங்குடியினர் நல அமைச்சகம், கேரள அரசிடம் சம்பவம் குறித்து அறிக்கை கேட்டுள்ளது. இந்தச் சம்பவ த்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.
பழங்குடி யினர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், சம்பவத்தில் தொடர்புடை யவர்களு க்கு ஜாமீன் கிடைக்காத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
ரூ.200 மதிப்புள்ள அரிசி திருடிய தற்காக மதுவை அந்தக் கும்பல் காட்டுக்குள் சென்று பிடித்தது. அப்போது, அவர் சமையல் செய்து கொண்டிருந் ததாகச் சொல்லப் படுகிறது.
அந்த அரிசி உணவை சமைத்து மது உண்டிருந் தால் கூட அவரின் வயிற்றில் ஒரு பருக்கை சோறாவது எஞ்சியிருந் திருக்கும். கடைசி வரை காய்ந்த வயிற்றுடன் அவர் உயிரை விட்டது தான் வேதனை யிலும் வேதனை!
Thanks for Your Comments