அமெரிக்கா, சீனாவில் தனி நபர் வருமான விகிதம் தெரியுமா?

4 minute read
0
2018-19ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விகிதம் எவ்வளவு இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 
அமெரிக்கா, சீனா போன்ற வளர்ந்த நாடுகளில் தனிநபர் வருமான வரி விகிதம் எவ்வளவு என்பதை நாம் தெரிந்து கொள்வது அவசியம்.

நம் நாட்டில் 2017-18ம் ஆண்டுக்கான தனிநபர் வருமான வரிவிகிதத்தைப் பொறுத்த வரையில் இரண்டரை லட்சம் வரையிலும் வரி கிடையாது. இரண்டரை லட்சம் முதல் ஐந்து லட்சம் வரையில் 5 சதவிகிதம் வருமான வரி விதிக்கப் படுகிறது.

அதற்கு மேலும் பத்து லட்சம் வரையிலும் 10 சதவிகிதமும், இருபது லட்சம் வரையில் 20 சதவிகிதமும், அதற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 30 சதவிகிமும், 

50 லட்சத்திற்கு மேற்பட்ட வருமானம் உள்ளவர்களுக்கு கூடுதலாக உபரி வரியாக 10 சதவிகிமும் விதிக்கப் படுகிறது.

ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானம் உள்ளவர் களுக்கு மேலும் கூடுதலாக உபரி வரியாக 15 சதவிகிமும் விதிக்கப் படுகிறது. 

இனி அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் தனிநபர் வருமான வரி விகிதம் எவ்வளவு என்று பார்க்கலாம்.

அமெரிக்கா

தனி நபர் பெரும் வருவாய் 4,06,751 டாலருக்கு அதிகமாக இருக்கு மானால் கூட்டாட்சி வரியாக 39.60 சதவிகிமும், மாநில வரியாக கூடுதல் வரியும் செலுத்த வேண்டும். 

இந்த வரி விகிதமானது 2004ம் ஆண்டு முதல் 2016 வரையில் 36.42 சதவிகிமும், இடையில் அதிக பட்சமாக தற்போது உள்ளது போல் 39.60 சதவிகிமும் விதிக்கப் பட்டது.

கனடா

கனடாவில் தனி நபர்களின் ஆண்டு வருமானம் 45916 கனடியன் டாலர் வரை இருந்தால் 33 சதவிகிதம் வரி செலுத்த வேண்டும்.
அமெரிக்கா, சீனாவில் தனி நபர் வருமான விகிதம் தெரியுமா?
இங்கு வசிப்பவர்களின் தனிநபர் வருமான வரி என்பது, தங்களின் உலகளாவிய வருமான த்திற்கு வருமான வரி செலுத்த வேண்டும். 

கூடவே, கூட்டாட்சி வருமான வரி, மாநில வருமான வரி மற்றும் பிராந்திய வருமான வரி ஆகிய வற்றையும் செலுத்த வேண்டும்.

பிரேசில்

பிரேசிலில் தனி நபர் வருமான வரி விகிதம் சராசரியாக 27.50 சதவிகி மாகும். இங்கு வருமான வரியானது பிரேசில் நாட்ட வர்களின் உலகளாவிய வருமான த்திற்கு 

ஒரு விகிதமா கவும், பிரேசிலில் குடியிருக்கும் பிறநாட்ட வர்களின் வருவாய்க்கு வேறு விதமாகவும் வரி விதிக்கப் படுகிறது. பிற நாட்டவர்கள் பிரேசிலில் எங்கு வருவாய் ஈட்டு கின்றாரோ அதற்கு ஏற்றார் போல் வரி விதிக்கப் படுகிறது. 

தனி நபர்களின் வருமான வரி விகிமானது பூஜ்ஜியம் முதல் 27.50 சதவிகிதம் வரையிலும் விதிக்கப் படுகிறது. 

தனி நபர்களின் ஆண்டு வருமானம் 1903.99 பிரேசிலியன் ரியலுக்கு மேல் இருந்தால் 27.50 சதவிகிதம் வரி செலுத்த வேண்டும்.

இங்கிலாந்து

இங்கிலாந்தில் வசிக்கும் தனி நபர்களின் வருமான வரி விகிமானது உல களாவிய ஆண்டு வருமானம் மற்றும் மூலதன வருவாயைக் கொண்டு கணக்கிடப் படுகிறது.
அமெரிக்கா, சீனாவில் தனி நபர் வருமான விகிதம் தெரியுமா?
அடிப்படை வரியாக 20 சதவிகிதம் வரையிலும், ஆண்டு வருவாய் 33500 பவுண்டுக்கு மேல் இருக்கு மானால் 45 சதவிகிதம் வரையிலும் வரி விதிக்கப் படுகிறது. 

இங்கிலாந்தில் சராசரி வருமான வரி விகிதம் 1995ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரையிலும் 42.27 சதவிகிமாகவும்,  

அதிகபட்ச வரியாக 2010ம் ஆண்டு 50 சதவிகிமும் குறைந்த பட்சமாக 1996ம் ஆண்டில் 40 சதவிகி மாகவும் இருந்தது.

ஜெர்மனி

ஜெர்மனியில் வருமான வரி விகிதமானது தற்போது 47.50 சதவிகிதமாக உள்ளது. அனைத்து ஜெர்மனியக் குடி மகன்களும், உலகளாவிய வருமானமாக ஆண்டிற்கு 8820 யூரோ பெறுபவர்களாக இருந்தால் அவர்கள் கட்டாயம் வருமான வரி செலுத்த வேண்டியது அவசியமாகும். 

அதில் விவசாயம், வனவியல், வர்த்தகம், தொழில் முறை வருமானம், சம்பளம், முதலீட்டு வருவாய், வாடகை மற்றும் குத்தகை வருவாய் போன்றவை அடங்கும். 

1995ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரையிலும் சராசரியாக 50.06 சதவி கிமாகவும், அதிக பட்சமாக 1996ம் ஆண்டு 57 சதவிகி மாகவும், 

குறைந்த பட்சமாக 2005ம் ஆண்டில் 44.30 சதவிகி மாகவும் இருந்துள்ளது. தற்போது வருமான வரி விகித மானது தற்போது 47.50 சதவிகிதமாக உள்ளது.

பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில் வருமான வரி விகிதம் என்பது சற்று வித்தியாசமாக முற்போக்கான வரி விகிதமாக பூஜ்ஜியம் முதல் 45 சதவிகிதம் வரையிலும் உள்ளது. 

அமெரிக்கா, சீனாவில் தனி நபர் வருமான விகிதம் தெரியுமா?
பிரான்ஸில் வசிக்கும் அனைத்து குடிமக்களும் வரி செலுத்துவது கட்டாய மாகும். திருமணமாகாத கட்டை பிரம்மச் சாரிகளின் ஆண்டு வருமானம் 250000 யூரோ வரையிலும், 

திருமண மாகி இருந்தால் ஆண்டு வருமானம் 500000 யூரோ வரையிலும் இருக்கு மானால் 45 சதவிகிமும் கூடுதல் உபரி வரியாக 3 சதவிகிமும் வருமான வரி செலுத்த வேண்டும். 

அதே சமயத்தில் தனி நபர்களின் ஆண்டு வருமானம் 500000 யூரோவிற்கு அதிகமாகவும், திருமண மானவர்களின் ஆண்டு வருமானம் 1000000 யூரோவிற்கு அதிகமாக இருந்தால் அவர்கள் 45 சதவிகிமும் கூடுதல் உபரி வரியாக 4 சதவிகிமும் வரி செலுத்த வேண்டும்,

இத்தாலி

இத்தாலி நாட்டில் தற்போது தனிநபர் வருமான வரி என்பது 48.80 சதவி கிதமாக உள்ளது. வருமான வரி என்பது தேசிய வருமான வரி மற்றும் தனிநபர் வருமான வரி என இரு வகையாக பிரிக்கப் படுகிறது. 

தேசிய வருமான வரி என்பது அனைத்து விதமான வருமானத்திற்கும் ஒருங்கிணைந்த வரியாக விதிக்கப் படுகிறது. 

மேலும், மண்டல வருமான வரி மற்றும் நகராட்சி வருமான வரி என குடியிரு க்கும் இடத்திற்கு ஏற்றவாறு வருமான வரி விதிக்கப் படுகிறது. தற்போது தனிநபர் வருமான வரி என்பது 48.80 சதவிகிதமாக உள்ளது. 

தனி நபர் வருமான வரி விகிதமானது 1995ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரையில் சராசரியாக 46.84 சதவிகிமாகவும், அதிகபட்ச வரியாக 1996ம் ஆண்டில் 51 சதவிகிமாகவும், 2005ம் ஆண்டில் 44.10 சதவிகிமாகவும் இருந்தது.

சீனா

நம் அண்டை நாடான சீனாவில் தனிநபர் வருமான வரி விகிதம் தற்போது 45 சதவிகிமாக உள்ளது. தனிநபர் வருமான வரிவிகிமானது 11 பிரிவிகளாக பிரிக்கப் பட்டுள்ளது. 

அமெரிக்கா, சீனாவில் தனி நபர் வருமான விகிதம் தெரியுமா?
இதில் சம்பள வருமானம், குத்தகை வருமானம். வாடகை வருவாய் போன்ற வையும் உள்ளடக்கம். கடந்த 17 வருடங்களாக குறைந்த பட்ச விகிமும் இது தான். அதிகபட்ச விகிதிமும் இது தான். 

தனிநபர் வருமான வரி விகிதம் தற்போது 45 சதவிகிமாக உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திய கணக்கின் படி தனி நபர் வருமான வரியாக 8460 கோடி யுவான் வந்துள்ளது.

ஜப்பான்

ஜப்பானில் தனிநபர் வருமான வரி செலுத்து வதற்கு குறைந்தது 19,50,000 யென் வருவாயை பெற வேண்டும். அதற்கு மேல் வருவாய் அதிகரிக்கும் போது அதற்கு ஏற்றார் போல் வரி செலுத்த வேண்டியது அவசியம். 

ஜப்பானிய நிரந்தர குடிமகன்களும் உலகளாவிய வருமான த்திற்கு வருமான வரி செலுத்துவது கட்டாய மாகும். ஜப்பானில் வசிக்கும் பிற நாட்டவர்கள் ஜப்பானில் பெருகின்ற வருமானத்திற்கு மட்டும் வரி செலுத்தினால் போதுமானது. 

நிரந்தர குடியுரிமை வேலை நிமித்தமாக ஜப்பானில் உள்ளவர்கள், தாங்கள் பெரும் இதர வருமான த்தில் குறிப்பிட்ட தொகையை வருமான வரியாக செலுத்த வேண்டியது அவசியம். 

தற்போது தனிநபர் வருமான வரி விகிமானது 55.95 சதவிகி மாக உள்ளது. இது 2004ம் ஆண்டு முதல் 2016 வரையில் சராசரியாக 50.65 சதவிகி மாக இருந்தது.

தென் கொரியா
அமெரிக்கா, சீனாவில் தனி நபர் வருமான விகிதம் தெரியுமா?
கொரியாவில் தனி நபர்களின் வருமான வரி என்பது இருவகையாக பிரிக்கப் படுகிறது. அதில் உலகளாவிய வருமானத் திற்கு 6 சதவிகிதம் முதல் 40 சதவிகிதம் வரையிலும், கொரியாவில் பெறும் வருவாய்க்கு 10 சதவிகிமும் வருமான வரி விதிக்கப் படுகிறது. 

தென் கொரியா வில், தற்போது தனிநபர் வருமான வரியானது 38 சதவிகிமாக உள்ளது. இதன் அதிக பட்ச சராசரி விகிதமானது 38 சதவிகிமாகும். குறைந்த பட்ச வரிவிகித மானது 2005ம் ஆண்டில் 35 சதவிகித மாக இருந்தது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 20, March 2025
Privacy and cookie settings